;
Athirady Tamil News

சந்திரயான் 3 வெற்றி: திட்ட இயக்குனர் வீர முத்துவேலுக்கு கல்லூரி மாணவர்கள் டார்ச் அடித்து வாழ்த்து!!

0

நிலவின் தென்துருவத்தில் வெற்றிகரமாக தரையிறங்கிய சந்திரயான் 3ன் திட்ட இயக்குனர் வீர முத்துவேல்க்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், சென்னை புறநகரில் உள்ள தாம்பரத்தில் இயங்கி வரும் தனியார் கல்லூரி ஒன்றில் மாணவர்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இணைந்து விஞ்ஞானி வீர முத்துவேலுக்கு தேசியக் கொடி ஏந்தியும், டார்ச் அடித்தும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்துனர். இதே கல்லூரியில்தான் சந்திரயான் 3 திட்ட இயக்குனர் வீர முத்துவேல் பி.இ., மெக்கானிக்கல் படித்து பட்டம் பெற்றார். தங்கள் கல்லூரியின் முன்னாள் மாணவர் என்ற பெருமையுடன் அக்கல்லூரி மாணவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.