;
Athirady Tamil News

பாகிஸ்தானில் இணைய வழியில் பாலியல் சுரண்டலுக்கு ஆளான 15 லட்சம் குழந்தைகள் – ஆய்வில் அதிர்ச்சி தகவல்

0

இஸ்லாமாபாத்,

இன்றைய டிஜிட்டல் யுகத்தில் இணையதளம் (இன்டர்நெட்) மனிதர்களின் அன்றாடத் தேவையாகிவிட்டது. ஆனால், அதே இணையதளம் சிறுவர், சிறுமிகளுக்கு எவ்வளவு பெரிய ஆபத்தாக உருவெடுத்துள்ளது என்பதை உலக நாடுகளுக்கு உணர்த்தும் அதிரவைக்கும் ஆய்வு அறிக்கை ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.

பாகிஸ்தானில் கடந்த ஓராண்டில் மட்டும் 12 முதல் 17 வயதுக்குட்பட்ட சுமார் 15 லட்சம் குழந்தைகள் இணையதளம் வழியாக பாலியல் சுரண்டல் மற்றும் அச்சுறுத்தல்களுக்கு ஆளாகியுள்ளனர் என யுனிசெப் மற்றும் இன்டர்போல் இணைந்து நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

இதில் 85 சதவீத வழக்குகளில் குழந்தைகளுக்குத் தெரிந்தவர்களே இந்த துரோகத்தைச் செய்துள்ளனர். சமூக வலைதளங்கள் மூலமாகவே 44 சதவீத பாதிப்புகள் நடந்துள்ளன. அவமானம் மற்றும் பயம் காரணமாக பாதிக்கும் மேற்பட்ட குழந்தைகள் இந்த கொடுமையை வெளியில் சொல்லாமல் மறைத்துவிட்டதாக அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது குறிப்பித்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.