;
Athirady Tamil News

நிலவில் இருந்து சந்திரயான் 3 அனுப்பும் புது தகவல்கள் உலகம் முழுவதும் பயனளிக்கும்- ஜனாதிபதி திரவுபதி முர்மு!!

0

டெல்லியில் உள்ள ராஷ்டிரபதி பவனில் உள்ள கலாச்சார மையத்தில் இன்று நடைபெற்ற பிரம்மா குமாரிகளின் முன்னாள் தலைவர் தாதி பிரகாஷ்மணியின் நினைவாக ஜனாதிபதி முர்மு தபால் தலையை வெளியிட்டார். தாதி பிரகாஷ்மணியின் 16வது நினைவு தினத்தை முன்னிட்டு, தகவல் தொடர்பு அமைச்சகத்தின் அஞ்சல் துறையின் ‘மை ஸ்டாம்ப்’ திட்டத்தின் கீழ் இந்த ஸ்டாம்ப் வெளியிடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பேசிய ஜனாதிபதி முர்மு, நிலவில் இருந்து சந்தியரான் 3 அனுப்பும் புது தகவல்கள் உலகம் முழுவதற்கும் பயனளிக்கும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் அவர் மேலும் பேசியதாவது:- விஞ்ஞானிகளின் வரலாறு காணாத வெற்றி நிலவின் தென் துருவத்தை அடைந்த முதல் நாடாக இந்தியா உருவாகியுள்ளது. சந்திரயான்- 3 திட்டத்தின் மூலம் முழு உலகத்திற்கும் பயனளிக்கும் புதிய தகவல்கள் சந்திர நிலத்திலிருந்து பெறப்படும் என்ற நம்பிக்கை உள்ளது. தாதி பிரகாஷ்மணி இந்திய விழுமியங்களையும் கலாசாரத்தையும் நாட்டிலும், வெளிநாடுகளிலும் பரப்பினார். அவரது தலைமையின் கீழ், பிரம்மா குமாரிகள் உலகின் மிகப்பெரிய பெண்கள் தலைமையிலான ஆன்மீக அமைப்பாக மாறியது.

ஒரு உண்மையான தலைவரைப் போல, அவர் சவாலான சூழ்நிலைகளிலும் நம்பிக்கையுடனும் தைரியத்துடனும் பிரம்மா குமாரி குடும்பத்திற்கு ஆதரவாக நின்று அவர்களை எப்போதும் வழிநடத்தினார். தாதி ஜி உடல் ரீதியாக நம்மிடையே இல்லாமல் இருக்கலாம், ஆனால் அவரது ஆன்மீக மற்றும் மேதாவி ஆளுமையின் நினைவுகள் மற்றும் அவரது மனித நலன் பற்றிய தகவல்கள் எப்போதும் நம்மிடையே இருக்கும். மேலும் வரும் தலைமுறைகளுக்கு தொடர்ந்து ஊக்கமளிக்கும் இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.