;
Athirady Tamil News

நிலவிற்கு விண்கலம் அனுப்பப்போகும் அடுத்த ஆசிய நாடு! !!

0

ஜப்பானின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமும் நிலவுக்கு விண்கலம் மூலம் ரோபோ அனுப்பும் முயற்சியில் தீவிரமடைந்துள்ளது.

இந்த விண்கலத்திற்கு ‘மூன் ஸ்னைப்பர்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது.

வெகுவிரைவில் இந்த விண்கலம் நிலவில் தரையிறங்கப் போவதாகவும் கூறப்படுகிறது.

ரஷ்யா, அமெரிக்கா, சீனா அதனைத் தொடர்ந்து இந்தியா போன்ற நாடுகளின் வரிசையில் ஜப்பானும் அவர்களது விண்வெளித் திட்டங்களின் மூலம் நிலவுக்கு விண்கலம் அனுப்பும் முயற்சியில் பல ஆண்டுகளாக ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த ஆண்டு (2022), ஜப்பானிலிருந்து நிலவிற்கு விண்கலம் அனுப்பிய முயற்சி தோல்வியில் முடிந்தது. கடந்த மாதம் கூட ஜப்பான் புதிய விண்கலம் ஒன்றை அனுப்பி சோதனை செய்தது. அந்த விண்கலமும் வெடித்ததில் ஜப்பானின் முயற்சி மீண்டும் தோல்வியைத் தழுவியது.

அதன் பின்னர் இப்போது, 2.4 மீற்றர் உயரமும், 2.7 மீற்றர் அகலமும், 1.7 மீற்றர் நீளமும் உடைய 700 கிலோ எடை கொண்ட ரோபோவை விண்கலத்தின் மூலம் நிலவுக்கு அனுப்ப விஞ்ஞானிகள் தயாராகி வருகின்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

‘மூன் ஸ்னைப்பர்’ விண்கலத்தில் ஜப்பானின் பிரபல பொம்மை நிறுவனத்தினால் உருவாக்கப்பட்ட சிறிய ரோவர் ஒன்றும் இணைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

இந்த விண்கலம் அனுப்பப்படுவது நிலவிலுள்ள மண்ணை ஆராய்வதனை நோக்காக கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.

‘மூன் ஸ்னைப்பர்’ விண்கலத்தை காற்றில் தள்ளப்படக்கூடிய ஒரு ரொக்கெட்டின் உதவியுடன் விண்வெளிக்கு அனுப்பப்படவுள்ளதாக விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

மூன் ஸ்னைப்பரானது சந்திரனை அடைவதற்கு பூமியின் ஈர்ப்பு விசையினை பயன்படுத்த உள்ளதாகவும், இதற்கு பல மாதங்கள் செல்லலாம் என்றும் ஜப்பானிய விஞ்ஞானிகளால் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.