;
Athirady Tamil News

காட்டுத்தீ பரவிவரும் நிலையிலும் காட்டிலிருந்து வெளியேற மறுக்கும் சிலர்

0

கனடாவின் நோவா ஸ்கொஷியா மாகாணத்தில் காட்டுத்தீ வேகமாக பரவிவருகிறது.

கனடாவின் நோவா ஸ்கொஷியா மாகாணத்தில் வேகமாகப் பரவிவரும் காட்டுத்தீ, சுமார் 2,000 ஹெக்டேர் நிலப்பரப்பை கபளீகரம் செய்துவிட்டது.

ஆனாலும், அந்த வனப்பகுதியில் முகாமிட்டிருக்கும் வீடற்றோர், அங்கிருந்து வெளியேற மறுத்துவருகிறார்கள்.

அரசு அதிகாரிகளும், தொண்டு நிறுவனங்களும் அவர்களை வெளியேற்ற முயற்சிகள் மேற்கொண்டுவரும் நிலையிலும், பலர் அங்கிருந்து வெளியேற மறுத்துவருகிறார்கள்.

காரணம், அவர்களுக்கு அதுதான் வீடு, அது அவர்கள் வசதியாக வாழும் இடம், அதனால்தான் அவர்கள் அங்கிருந்து வெளியேற மறுக்கிறார்கள் என்கிறார் Souls Harbour Rescue Mission என்னும் அமைப்பின் மேலாளரான மேத்யூ ரீட் என்பவர்.

இப்போது வனப்பகுதியில் தங்கியிருப்பது பாதுகாப்பானதல்ல என்பதை அவர்களுக்கு புரியவைக்க எங்களாலானமட்டும் முயற்சித்து வருகிறோம் என்கிறார் அவர்.

வனப்பகுதிக்குள் நுழைவோருக்கும், குளிர் காய்வது போன்ற விடயங்களுக்காக தீ பற்றவைப்பவர்களுக்கும் 25,000 டொலர்கள் அபராதம் விதிக்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.

விடயம் என்னவென்றால், வறட்சியான காலங்களில், வீடற்றோர் வனப்பகுதிகளில் வாழும் விடயம் குறித்து அரசியல்வாதிகள் வாயே திறக்கவில்லை.

இந்நிலையில், ஏற்கனவே வறுமையில் வாடிவரும் வீடற்றோருக்கு 25,000 டொலர்கள் அபராதம் விதிக்கப்படுவதற்கு எதிராக தொண்டு நிறுவனங்கள் கருத்து தெரிவித்துவருகின்றன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.