;
Athirady Tamil News

இந்தோனேசியாவின் பாலி கடல் பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்- ரிக்டர் அளவில் 7.0 ஆக பதிவு!!

0

இந்தோனேசியாவின் பாலி கடல் பகுதியில் இன்று அதிகாலை 7.0 ரிக்டர் அளவில் சக்சி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக ஐரோப்பிய- மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. பூகம்பத்தின் மையம் இந்தோனேசியாவின் மாதரத்திலிருந்து வடக்கே 201 கிலோமீட்டர் தொலைவிலும், பூமியின் மேற்பரப்பிலிருந்து 518 கிலோமீட்டர் (322 மைல்) கீழேயும் இருந்ததாகவும் நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுவே, அமெரிக்க புவியியல் ஆய்வு மையத்தின்படி, ரிக்டர் அளவுகோலில் 7.1 ஆக பதிவாகியுள்ளது. இந்தோனேசியாவின் மேற்கு நுசா தெங்கரா, பங்சல் அருகே நிலநடுக்கத்தின் மையப்பகுதிக்கு அடியில் 525 கிமீ ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதற்கிடையில், கடலுக்கு அடியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் விளைவாக சுனாமி அச்சுறுத்தல் எதுவும் இல்லை என்று அமெரிக்க சுனாமி எச்சரிக்கை அமைப்பு தெரிவித்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.