;
Athirady Tamil News

ஐபோனுக்காக இளைஞரை கொடூரமாக கொன்ற சிறார்கள்! அதிர வைத்த சம்பவம்

0

இந்திய மாநிலம் உத்தரபிரதேசத்தில் இரண்டு சிறுவர்கள், ஐபோனுக்காக இளைஞரை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சடலமாக கண்டெடுப்பு
உத்தரபிரதேசத்தில் தனது தாய் மாமாவின் திருமணத்திற்காக, பெங்களூருவில் வசித்து வந்த ஷதாப் (19) சென்றுள்ளார். ஆனால் அவர் கடந்த 21ஆம் திகதி மாயமானார்.

இந்த நிலையில் ஷதாப்பின் உடல் பழத்தோட்டம் ஒன்றில் கிணற்றுக்கு அருகே கண்டெடுக்கப்பட்டது.

அவர் கொடூரமாக தாக்கப்பட்டு கொல்லப்பட்டது, அவரது கழுத்தில் கத்தி வெட்டு, தலையில் செங்கலால் தாக்கப்பட்ட அடையாளம் மூலம் தெரிய வந்தது.

ஷதாப்பின் உடலைக் கைப்பற்றிய பொலிஸார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அதிர்ச்சியான விடயம் தெரிய வந்தது.

ரீல்ஸ் உருவாக்க
சந்தேகத்தின் பேரில் பிடிக்கப்பட்ட இரண்டு சிறுவர்களிடம் விசாரித்ததில், அவர்கள் கொலை செய்தது தெரிய வந்தது.

அவர்கள் அளித்த வாக்குமூலத்தில், சிறந்த ரீல்ஸ் வீடியோக்களை உருவாக்க உயர்தர செல்போன் வேண்டும் என நினைத்துள்ளனர்.

அதற்காக ஷதாப்பை கொலை செய்து, அவரது ஐபோனை திருடியதாக தெரிவித்திருக்கின்றனர். அவர்களிடம் ஐபோன், கொலைக்குப் பயன்படுத்திய கத்தி மற்றும் செல்போன் ஆகியவற்றை பொலிஸார் கைப்பற்றினர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.