;
Athirady Tamil News

மட்டன் உணவு சமைப்பது குறித்து ராகுலுக்கு ஆலோசனை வழங்கிய லல்லு!!

0

எதிர்க்கட்சியான இந்தியா கூட்டணியின் 3-வது கூட்டம் கடந்த வியாழன் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் மும்பையில் நடந்தது. இந்த நிலையில் ராகுல் காந்திக்கு மட்டன் உணவை எப்படி சமைப்பது என்பது குறித்து லல்லு பிரசாத் யாதவ் ஆலோசனை வழங்கினார். இது தொடர்பான 7 நிமிட வீடியோவை ராகுல்காந்தி பகிர்ந்துள்ளார். காங்கிரஸ் முன்னாள் தலைவரும், எம்.பி.யுமான ராகுல் காந்திக்கு ராஷ்டிரிய ஜனதாதள தலைவரும், பீகார் முன்னாள் முதல்- மந்திரியுமான லல்லு பிரசாத் யாதவ் டெல்லியில் உள்ள தனது மகள் மிசா பார்தியின் வீட்டில் வைத்து மட்டன் உணவு தயாரிப்பது எப்படி என்று ஆலோசனை வழங்கி உள்ளார்.

சமையல் செய்வதில் திறமைசாலியான லல்லு பிரசாத் யாதவ் பீகாரின் புகழ்பெற்ற ‘சாம்பரான்’ மட்டன் உணவை எப்படி சமைப்பது என்பது குறித்து ராகுல் காந்திக்கு வழங்கினார். மேலும் பல்வேறு சிறப்பு உணவுகள் குறித்தும் அவர் குறிப்புகளை வழங்கினார். லல்லு சொல்லிக் கொடுத்தவாறு ராகுல் காந்தி மட்டன் உணவை சமைத்தார். பின்னர் அந்த உணவை அனைவரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டனர்.

ராகுல் காந்திக்கு எப்படி சமைப்பது என்பது பற்றி லல்லு சொல்லி கொடுப்பதும் பின்னர் சாப்பிடுவதும் அந்த வீடியோவில் பதிவாகி இருக்கிறது. எனக்கு சமைக்க தெரியும். ஆனால் நான் நிபுணர் அல்ல. ஐரோப்பாவில் பணிபுரியும் போது நான் சமைக்க கற்றுக் கொண்டேன். நான் தனியாக இருந்ததால் கற்றுக் கொள்ள வேண்டி இருந்தது. என்னால் அடிப்படையான உணவுகளை மட்டுமே சமைக்க தெரியும். லல்லுஜி இதில் (சமையல்) சாம்பியன், நான் அவரிடம் பல விஷயங்களை கற்றுக் கொண்டேன். லல்லு சமைத்த மட்டன் உணவை எனது சகோதரி பிரியங்காவுக்கு எடுத்துக் சென்றேன். இவ்வாறு அவர் கூறினார்.

தான் 6-ம் வகுப்பு படித்துக் கொண்டு இருக்கும் போதே தனது சகோதரர்களிடம் இருந்து சமைக்க கற்றுக் கொண்டதாக ராகுல் காந்தியிடம் லல்லு பிரசாத் யாதவ் கூறினார். இருவரும் சமையல் செய்து கொண்டு இருக்கும் போது அரசியல் குறித்து பேசினார்கள். சமையல் போலவே அரசியலிலும் கலக்காமல் எதுவும் சாத்தியமில்லை என்று ராகுலிடம் லல்லு குறிப்பிட்டார். இந்த உணவு பரிமாற்றத்தின் போது பீகார் துணை முதல்-மந்திரி தேஜஸ்வி யாதவ், அவரது சகோதரி மிசா பார்தி ஆகியோரும் உடன் இருந்தனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.