;
Athirady Tamil News

இந்துத்வா பேசிய சாவர்க்கரை நேதாஜி சந்தித்தது ஏன்? என்ன நடந்தது? !!

0

நாடாளுமன்றமாக இருக்கட்டும், நடுத்தெருவாக இருக்கட்டும் விநாயக் தாமோதர் சாவர்க்கரின் பெயர் ஏதோ ஒரு காரணத்திற்காக விவாதப் பொருளாகவே உள்ளது.

இந்த விவாதம் சாவர்க்கரின் 140வது பிறந்தநாளின் போது இந்திய நாடாளுமன்றத்தின் புதிய கட்டடத்தின் திறப்பு விழா நடந்ததையடுத்தும் சர்ச்சை தொடங்கியது.

அவதூறு வழக்கில் மன்னிப்பு கேட்கும் விஷயத்தில், “என் பெயர் சாவர்க்கர் அல்ல, என் பெயர் காந்தி, காந்தி யாரிடமும் மன்னிப்பு கேட்கவில்லை,” என்று ராகுல் காந்தி கூறியதும் சாவர்க்கர் மீதான விவாதம் தொடங்கியது.

ஆளும் பாஜகவுக்கு சாவர்க்கர் ஒரு ‘வீரர்’, ஒரு சிறந்த ஆளுமை, இந்துத்துவாவின் மிகப்பெரிய சித்தாந்தவாதி.

‘இந்தியா’ கூட்டணியின் முக்கிய கூட்டாளியான உத்தவ் தாக்கரேவின் சிவசேனாவுக்கும் சாவர்க்கர் மிகவும் மதிக்கப்படும் ஆளுமை. மறுபுறம், சாவர்க்கரை காங்கிரசுக்கு பிடிக்கவில்லை, அதற்கு பல வரலாற்று மற்றும் சித்தாந்த காரணங்கள் உள்ளன. அவர் பிரிட்டிஷ் அரசிடம் பலமுறை மன்னிப்பு கேட்டதை காங்கிரஸ் மீண்டும் மீண்டும் நினைவுபடுத்துகிறது.

காந்தி கொலையில் முக்கியமாகக் குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவர் சாவர்க்கர்.

‘சுதந்தர வீர சாவர்க்கர்’ படத்தின் டீசர் மே 28 அன்று சாவர்க்கர் ஜெயந்தியை முன்னிட்டு வெளியிடப்பட்டது. சாவர்க்கரின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் ரன்தீப் ஹூடா நடிக்கிறார், அவரே இந்தப் படத்தை இயக்குகிறார்.

“சுதந்தரத்திற்கான போராட்டம் 90 ஆண்டுகளாக நீடித்தது, ஆனால் இந்தச் சண்டையில் ஒரு சிலர் மட்டுமே போராடினர். மீதமுள்ளவர்கள் அதிகாரப் பசி கொண்டிருந்தனர்,” என்பது இந்த டீசரில் வருகிறது.

காந்தி கொலையில் முக்கியமாகக் குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவர் சாவர்க்கர். ஆனால் போதிய ஆதாரம் இல்லாததால் சாவர்க்கரை விடுதலை செய்து நீதிபதி உத்தரவிட்டார்.

பல்வேறு விஷயங்கள் குறித்து காந்தியை விமர்சிப்பது புதிய விஷயம் அல்ல, ஆனால் காந்தியைக் கொன்ற நாதுராம் கோட்சேவை ‘தேசபக்தர்’ என்று அழைக்கும் போக்கு புதிது. இது தொடர்பாக பாஜக எம்பி சாத்வி பிரக்யா தாக்கூர் கூறியிருப்பது சுவாரஸ்யமானது. இதுகுறித்துப் பிரதமர் அவரை இதயப்பூர்வமாக மன்னிக்க முடியாது என்று குறிப்பிட்டிருந்தார்.”

அதன் தொடர்ச்சியாக, ‘சுதந்தர வீர சாவர்க்கர்’ படத்தின் டீசரில், “காந்திஜி மோசமானவர் இல்லை, ஆனால் அவர் தனது அகிம்சை சிந்தனையில் நிலைத்திருக்காமல் இருந்திருந்தால், இந்தியா 35 ஆண்டுகளுக்கு முன்பே சுதந்திரமாக இருந்திருக்கும்,” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுமட்டுமின்றி, ‘சுதந்தர வீர சாவர்க்கர்’ படத்தின் டீசரில், “பகத்சிங், சுபாஷ் சந்திரபோஸ், குதிராம் போஸ் ஆகியோருக்கு உத்வேகம் அளித்தவர் சாவர்க்கர்,” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

சாவர்க்கரின் டீசரை வெளியிட்ட ரன்தீப் ஹூடா, “பிரிட்டிஷாரால் மிகவும் தேடப்பட்ட இந்தியர். நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், பகத்சிங் மற்றும் குதிராம் போஸ் போன்ற புரட்சியாளர்களுக்கு ஒரு உத்வேகம். வீர் சாவர்க்கர் யார்? அவரது உண்மைக் கதையைப் பாருங்கள்,” என்று எழுதியிருந்தார்.

இந்த டீசரில் கூறப்பட்ட கூற்றுகளுக்குப் பிறகு, குதிராம் போஸ், பகத் சிங் மற்றும் சுபாஷ் சந்திர போஸ் ஆகியோர் உண்மையில் சாவர்க்கரால் உத்வேகம் பெற்றார்களா என்ற கேள்வி எழுந்தது.

சாவர்க்கரை பற்றிய இந்தக் கூற்றுகளில் உண்மைகள் என்ன, வரலாற்று ஆசிரியர்கள் என்ன சொல்கிறார்கள்? இதைத்தான் நாம் புரிந்து கொள்ள முயல்கிறோம்.

கடந்த 1910ஆம் ஆண்டு கைது செய்யப்பட்ட சாவர்க்கர், விசாரணைக்குப் பிறகு அந்தமான் செல்லுலார் சிறைக்கு அதாவது காலா பானிக்கு அனுப்பப்பட்டார்.

நாசிக் கலெக்டர் எம்டி ஜாக்சன் கொலை உட்பட பல வழக்குகளில் 1910இல் கைது செய்யப்பட்ட சாவர்க்கர், விசாரணைக்குப் பிறகு அந்தமான் செல்லுலார் சிறைக்கு அதாவது காலா பானிக்கு அனுப்பப்பட்டார்.

பகத் சிங் பற்றி பல புத்தகங்களை எழுதியுள்ள பேராசிரியர் சமன்லால், படத்தின் டீசரில் கூறப்பட்ட கூற்றை நிராகரிக்கிறார்.

பேராசிரியர் சமல் லால் கூறுகிறார், “பகத் சிங் சாவர்க்கரை ஒருபோதும் சந்திக்கவுமில்லை அவரால் ஈர்க்கப்படவுமில்லை. அவர் 1924இல் ஒரு கட்டுரையில் சாவர்க்கரை பற்றி குறிப்பிட்டது முற்றிலும் உண்மை.

இங்கே கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், இந்தக் கட்டுரையில் அவர் அனைத்து தேசபக்தர்கள், போராட்டாக்காரர்கள் பெயரையும் குறிப்பிட்டிருந்தார், சாவர்க்கரை மட்டுமில்லை. இதில் லெனின் மற்றும் கரிபால்டியுடன் சாவர்க்கரின் பெயரும் உள்ளது.”

மாறாக, ‘வீர சாவர்க்கர்: பிரிவினையைத் தடுத்திருக்கக்கூடிய மனிதர்’ என்ற நூலின் ஆசிரியர் உதய் மஹுர்கர், டீசரில் கூறப்பட்ட கூற்றுகளை நியாயப்படுத்துகிறார்.

“அவர் தாக்கத்தை ஏற்படுத்தியதற்கு நிறைய சான்றுகள் உள்ளன. அது அவருடைய எழுத்துக்களாக இருக்கலாம் அல்லது சாவர்க்கரின் ‘1857’ புத்தகத்தை சிறையில் வைத்திருந்ததாக இருக்கலாம்,” என்று மஹூர்கர் கூறுகிறார்.

“பகத்சிங் சாவர்க்கரின் அபிமானி என்பதில் சந்தேகமில்லை. இந்த உண்மையை மறைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பகத்சிங் ‘மத்வாலா’ இதழில் சாவர்க்கரை பற்றி ஒரு கட்டுரை எழுதியபோது, சாவர்க்கர் ரத்னகிரியில் உள்ள அவரது வீட்டில் கைது செய்யப்பட்டிருந்தார்,” என்கிறார் அவர்.

மஹுர்கரும், பேராசிரியர் சமன்லாலும் குறிப்பிடும் கட்டுரை, பகத் சிங் 1924ஆம் ஆண்டு எழுதிய கட்டுரை.

பகத்சிங்கின் இந்தக் கட்டுரை, கல்கத்தாவிலிருந்து வெளியாகும் ‘மத்வாலா’ வார இதழின் இரண்டு இதழ்களில் ‘விஸ்வபிரேம்’ என்ற தலைப்பில் பல்வந்த் சிங் (புனைப்பெயர்) பெயரில் வெளிவந்தது.

இந்தக் கட்டுரையில், மகாத்மா காந்தி, பாலகங்காதர திலகர் உள்ளிட்ட பலரையும் பகத்சிங் குறிப்பிட்டுள்ளார்.

சாவர்க்கரின் புத்தகம் முதலில் மராத்தியில் வந்தது, அதன் பெயர் ‘1857 இன் சுதந்திரப் போர்’.

பகத் சிங் சிறையிலும் அதிகம் படித்திருப்பார் என்பது அவரது சிறைக் குறிப்புகள் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஃபிரெட்ரிக் ஏங்கெல்ஸ், பெர்டாண்ட் ரசல், விளாடிமிர் லெனின், கார்ல் மார்க்ஸ், விக்டர் ஹ்யூகோ, ஃபியோடர் தஸ்தாயெவ்ஸ்கி ஆகியோரின் புத்தகங்களுடன், சாவர்க்கரின் ‘இந்து பத்-பாத்ஷாஹி’ புத்தகத்தின் சில வரிகளும் அவரது குறிப்புகளில் இடம்பெற்றிருந்தன.

இந்த எழுத்தாளர்களின் புத்தகங்களில் இருந்து சில வரிகளை பகத்சிங் தனது குறிப்பேட்டில் எழுதியிருந்தார். இந்த வரிகளுக்குப் பின்னால் அவர் எந்தக் கருத்தையும் எழுதவில்லை.

கடந்த 1857 ஆம் ஆண்டு சுதந்தரப் போராட்டம் குறித்து சாவர்க்கர் எழுதிய புத்தகத்தை, பகத் சிங்கின் தோழர்கள் அச்சிட்டு அதன் பிரதிகளை விநியோகித்ததாகக் கூறப்படுகிறது.

சாவர்க்கரின் இந்தப் புத்தகம் முதலில் மராத்தியில் வந்தது, அதன் பெயர் ‘1857இன் சுதந்திரப் போர்’. இந்தப் புத்தகம் 1909இல் வெளியிடப்பட்டது மற்றும் இது 1857ஆம் ஆண்டு கிளர்ச்சி பற்றிய விரிவான தகவல்களைக் கொண்ட முதல் புத்தகம் என்று கூறப்படுகிறது.

அந்த நகல் பகத்சிங் மற்றும் அவரது தோழர்களுக்கும் சென்றடைந்ததாக சமன்லால் கூறுகிறார். அதன்பிறகு, இந்தப் புத்தகத்தை இந்தியில் மொழிமாற்றம் செய்து, தங்கள் முயற்சியால் ரகசியமாக வெளியிட்டு, அந்தப் புத்தகத்தையும் விநியோகம் செய்தனர்.

“1929-31க்கு இடையில் பகத்சிங் சிறையில் இருந்தபோது, அவர் ஒரு முறைகூட சாவர்க்கரை பற்றிப் பேசவில்லை. அவர் லெனின் மற்றும் பிற கம்யூனிஸ்ட் தலைவர்களைப் பற்றி எல்லாம் குறிப்பிட்டார். அதுவரை அவர் தன்னை ஒரு கம்யூனிஸ்ட்டாகவே கருதினார். 1857 போராட்டத்தைப் பற்றிய விரிவான விளக்கத்தைக் கொண்டிருப்பதால் அந்தப் புத்தகத்தை வெளியிட்டார்,” என்று அவர் கூறுகிறார்.

இருப்பினும், பகத் சிங்கையும் சாவர்க்கரையும் வெவ்வேறு தளங்களில் வைத்திருக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், பகத் சிங் தூக்கிலிடப்பட்டார், சாவர்க்கர் மன்னிப்புக் கோரினார் என்பதுதான் மிகப்பெரிய வாதம். அதேநேரம் இரு புரட்சியாளர்களின் உத்தியும் வேறு வேறானது என்பதுதான் உண்மை என்று மஹூர்கர் கூறுகிறார்.

சாவர்க்கரும் பகத்சிங்கும் முற்றிலும் வெவ்வேறு சித்தாந்தங்கள்

சாவர்க்கரை ஆழமாகப் படித்த பத்திரிக்கையாளரும் எழுத்தாளருமான நிரஞ்சன் டாக்லே, “சாவர்க்கரின் வாழ்க்கையின் முதல் பகுதி ஒரு துள்ளலான புரட்சியாளராக இருந்தார். அதில் அவர் ஆடம்பர ஆடைகளை எரித்து ஹோலி கொண்டாடினார். 1857இல் ஒரு புத்தகம் எழுதுகிறார். அதில் அவர் மதச்சார்பின்மை பற்றிக் குறிப்பிடுகிறார். ஆனால் வாழ்க்கையின் இரண்டாம் பாதியில் அவர் முற்றிலும் மாறுபட்ட தோற்றத்தைக் கொண்டுள்ளார்,” எனக் கூறுகிறார்.

விநாயக் தாமோதர் சாவர்க்கருக்கும் பகத்சிங்குக்கும் சித்தாந்த ரீதியில் என்ன வித்தியாசம்?

டெல்லி பல்கலைக்கழக பேராசிரியர் ஷம்ஸ்-உல்-இஸ்லாம் கூறும்போது, “பகத்சிங் மற்றும் சாவர்க்கரின் சித்தாந்தங்களுக்கு இடையே மிகப்பெரிய வேறுபாடு உள்ளது. இருவருக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. பகத்சிங் அனைத்து மதங்களின் ஒற்றுமை பற்றிப் பேசும் நிலையில், சாவர்க்கரின் முழு சித்தாந்தமும் இந்து மேலாதிக்கமாக உள்ளது.”

இந்துத்துவாவை முதன்முறையாக அரசியல் சித்தாந்தம் என்று விவரித்தவர் சாவர்க்கர்.

பேராசிரியர் ஷம்ஸ்-உல்-இஸ்லாம், “முஸ்லிம்களும் கிறிஸ்தவர்களும் இந்த நாட்டின் பகுதி அல்ல என்று சாவர்க்கர் இந்துத்துவாவை வரையறுத்துள்ளார். அவரைப் பொறுத்தவரை, யாருக்கு இது தாய்நாடோ யாருடைய புனித பூமி இங்கே இருக்கிறதோ அவர்களுக்குத் தான் இந்துஸ்தானம் சொந்தமானது,” என்றார்.

புண்ணியபூமி என்றால் புண்ணியத் தலங்கள். யார் யாத்திரை செய்யும் இடங்கள் இந்தியாவில் இல்லாமல் இந்தியாவுக்கு வெளியே இருக்கிறதோ, அவர்கள் தங்கள் புனிதத் தலங்களை மதிப்பதால், இந்தியாவின் மீதான அவர்களின் நம்பிக்கை கேள்விக்குரியது என்று வாதிடுகிறார்.

சாவர்க்கர் இந்துக்களின் ஆட்சியை விரும்பிய நிலையில், உழைக்கும் மக்களின் ஆட்சியைப் பற்றி பகத்சிங் பேசி வந்தார்.

முஸ்லிம் லீக் தலைவர் ஜின்னா மற்றும் இந்து மகாசபை தலைவர் சாவர்க்கர் ஆகியோரை சந்தித்தார் சுபாஷ் சந்திரபோஸ்.

சுபாஷ் சந்திரபோஸ் ஐரோப்பாவின் பல நாடுகளுக்குப் பயணம் செய்துவிட்டு 1936இல் இந்தியா திரும்பினார்.

இந்தியா திரும்பினால் கைது செய்யப்படலாம் என வியன்னாவில் பிரிட்டிஷ் அரசு எச்சரித்தது. ஆனால் அவர் அதைப் புறக்கணித்துவிட்டு, இந்தியா வந்தவுடன் கைது செய்யப்படுகின்றார்.

சிறையில் இருந்து விடுதலையான பிறகு, 1938இல், குஜராத்தின் சூரத்தில் உள்ள ஹரிபுராவில் போஸ் காங்கிரஸ் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் மீண்டும் 1939இல் தலைவரானார். ஆனால் காங்கிரசுக்குள் கருத்து வேறுபாடுகள் அதிகரித்தபோது அவர் கட்சியை விட்டு வெளியேறினார்.

இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு, ஐரோப்பாவின் நெருக்கடியைப் பயன்படுத்தி சுதந்திரத்தை அடைய முடியும் என்று போஸ் நம்பத் தொடங்கிய காலகட்டம் அது. ஆனால் காங்கிரசுக்குள் இந்தக் கருத்து தொடர்பாக ஒற்றுமை இல்லை.

இந்தக் காலக்கட்டத்தில் மகாத்மா காந்தி தன்னுடன் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தார் என்று சுபாஷ் சந்திரபோஸ் தனது ‘இந்தியா ஸ்டிரக்கிள்’ புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.

ஐரோப்பாவின் நெருக்கடிக்கு மத்தியில், நாடு முழுவதும் மற்றும் நாட்டிற்கு வெளியேயும் சுதந்திரத்திற்கான வலுவான போராட்டம் நடத்தப்பட வேண்டும் என்று அவர் மகாத்மா காந்தியை வற்புறுத்த முயன்றார்.

இந்த நேரத்தில், அவர் முஸ்லிம் லீக் தலைவர் ஜின்னா மற்றும் இந்து மகாசபை தலைவர் சாவர்க்கர் ஆகியோரையும் சந்தித்தார்.

நேதாஜி எழுதிய புத்தகத்தின் பக்கம் எண் 344இல் “அந்த நாட்களில், திரு. ஜின்னா ஆங்கிலேயர்களின் உதவியுடன் பாகிஸ்தானை உருவாக்கும் திட்டத்தைப் பற்றி யோசித்தார். காங்கிரஸுடன் இணைந்து ஆங்கிலேயருக்கு எதிராகக் கூட்டாகப் போராடும் யோசனையை அவர் அதிகம் ஆதரிக்கவில்லை,” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தப் போரில் வெற்றி பெற்றால் இந்தியாவின் முதல் பிரதமராகக்கூட வரலாம் என்று போஸ் அவருக்கு இந்தக் கூட்டத்தில் அறிவுரை கூறியிருந்தார்.

அதே புத்தகத்தில், அவர் சாவர்க்கரை பற்றி எழுதுகிறார், “திரு சாவர்க்கர் சர்வதேச சூழ்நிலையை மறந்துவிட்டதாகத் தோன்றியது. மேலும் இந்தியாவில் உள்ள பிரிட்டிஷ் ராணுவத்தில் இந்துக்கள் எவ்வாறு சேரலாம் மற்றும் ராணுவப் பயிற்சி பெறலாம் என்றும் மட்டுமே யோசித்துக்கொண்டிருந்தார்.”

இந்தக் கூட்டங்களுக்குப் பிறகு, முஸ்லிம் லீக்கிடமோ, இந்து மகாசபையிடமோ எதையும் எதிர்பார்க்க முடியாது என்ற முடிவுக்கு போஸ் வர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாக இந்நூலில் எழுதப்பட்டுள்ளது.

இந்த சந்திப்புகளுக்குப் பிறகு, சுபாஷ் சந்திரபோஸ் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார். அங்கிருந்து அவர் பதான் வேடமணிந்து 1941 ஜனவரியின் ஓர் இரவில் வீட்டை விட்டு வெளியேறி பல நாடுகளின் எல்லைகளைக் கடந்து ஜப்பானை அடைந்தார்.

சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபடும் மக்கள், குழுக்கள் மற்றும் கட்சிகள் அனைவருக்கும் நாளைய இந்தியாவில் கௌரவமான இடம் கிடைக்கும் என்றார்.

‘Savarkar: Kalapani and after’ புத்தகத்தின் ஆசிரியர் அசோக் குமார் பாண்டே, “சுபாஷ் சந்திரபோஸ் ஜப்பானில் இருந்தபோது, ஓர் உரையில் சாவர்க்கர் மற்றும் ஜின்னா இருவரையும் விமர்சித்தார். இந்தியாவிலும் அவர் இருவரையும் சந்தித்துப் பேசினார்.

வகுப்புவாதப் பாதையை விட்டு வெளியேறுமாறு கேட்டுக் கொண்டார். எனவே சுபாஷ் சந்திரபோஸ் சாவர்க்கரால் ஈர்க்கப்பட்டார் என்ற கூற்று முற்றிலும் சரியல்ல,” எனக் கூறுகிறார்.

சுபாஷ் சந்திரபோஸின் உரைகளின் தொகுப்பான ‘சுபாஷ் சந்திரபோஸின் தேர்ந்தெடுக்கப்பட்ட உரைகள்’ வெளியிடப்பட்டுள்ளது.

ஆகஸ்ட் 31, 1942இல், ஆசாத் ஹிந்த் வானொலி சுபாஷ் சந்திர போஸின் உரையை ஒளிபரப்பியது. இந்தப் பேச்சு ‘வெள்ளையனே வெளியேறு இயக்கம்’ பற்றியது.

இதில், “இந்தியாவில் இந்த இயக்கம் வேகமாகப் பரவி வரும் நிலையில், மறுபுறம் சர்வதேச அளவிலும் இந்தியாவுக்கு ஆதரவாகக் கருத்து உருவாகி வருகிறது,” என்று கூறியிருந்தார்.

இதில் அவர் ஜின்னா மற்றும் சாவர்க்கரிடம் ஒரு வேண்டுகோள் விடுக்கிறார், “இன்னும் பிரிட்டனுடன் சமரசம் செய்ய நினைக்கும் திரு. ஜின்னா மற்றும் திரு. சாவர்க்கர் உட்பட அந்தத் தலைவர்கள் அனைவரையும் நான் கேட்டுக்கொள்கிறேன். நாளை பிரிட்டிஷ் பேரரசு நிலைக்காது.”

சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபடும் மக்கள், குழுக்கள் மற்றும் கட்சிகள் அனைவருக்கும் நாளைய இந்தியாவில் கௌரவமான இடம் கிடைக்கும் என்றார்.

எழுத்தாளர் உதய் மஹூர்கர் கூறுகையில், சுபாஷ் சந்திரபோஸ் வெளியே சென்று ஆயுதப் பிரசாரத்தை முன்னெடுத்துச் செல்லத் தொடங்கியபோது, ராஷ் பிஹாரி போஸ் அப்போது ஜப்பான் இந்து மகாசபையின் தலைவராக இருந்தார். மேலும் அவர் அவருக்கு நிறைய உதவினார் என்று தெரிவிக்கிறார்.

“சுபாஷ் சந்திர போஸை நாட்டை விட்டு வெளியே செல்லுமாறு அறிவுறுத்தியவர்களில் சாவர்க்கரும் ஒருவர். 1952இல் ‘அபினவ் பாரத்’ நிகழ்ச்சியில் மேடையில் சாவர்க்கர் இதைக் குறிப்பிட்டார்,” என்று மஹுர்கர் கூறுகிறார்.

படத்தின் டீஸர் வெளியானதும், சுபாஷ் சந்திரபோஸின் பேரனும், சமூக-அரசியல் விமர்சகருமான சந்திரகுமார் போஸ், சுபாஷ் சந்திரபோஸ் சாவர்க்கரால் ஈர்க்கப்படவில்லை என்கிறார்.

இந்தப் படத்தின் டீஸர் வெளியானதும், சுபாஷ் சந்திரபோஸின் பேரனும், சமூக-அரசியல் விமர்சகருமான சந்திரகுமார் போஸ் கூறுகையில், இப்படம் வரலாற்று உண்மைகளைத் தகர்க்கிறது.

சுபாஷ் சந்திரபோஸ் சாவர்க்கரால் ஈர்க்கப்படவில்லை என்கிறார்.

பிபிசியிடம் பேசிய அவர், “சுதந்தரப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடனும் அல்லது சேர விரும்புபவர்களுடனும் போஸ் பேசுவார். ஆனால் இந்து மகாசபை மற்றும் போஸின் சித்தாந்தங்கள் முற்றிலும் எதிர்மாறானவை,” என்றார்.

“சுபாஷ் சந்திர போஸின் அரசியல் கருத்துகள் மதச்சார்பற்றவை. அவர் ஒரு காளி பக்தர். அவர் சுவாமி விவேகானந்தரின் சீடராகவும் இருந்தார், ஆனால் அவர் மதத்தையும் அரசியலையும் தனித்தனியாக வைத்திருந்தார். அதேநேரம் இந்து மகாசபை இந்துத்துவ சித்தாந்தத்தில் நம்பிக்கை கொண்டுள்ளது.

சாவர்க்கரின் சித்தாந்தம் மற்றும் ஷ்யாமா பிரசாத் முகர்ஜியின் சித்தாந்தம் வேறுபட்டது, ஆனால் அவர்களுக்கும் சுபாஷ் சந்திரபோஸுக்கும் எந்த ஒற்றுமையும் இல்லை,” என்று சந்திரகுமார் போஸ் விளக்குகிறார்.

சந்திர குமார் போஸ் கூறுகையில், சாவர்க்கர் ஒரு சுதந்திரப் போராட்ட வீரர் என்றும், தனக்கென தனியான பாணி இருந்தது என்றும் கூறுகிறார். அவர் தனது சொந்த வழியில் அதற்குப் பங்களித்தார். அவர் சிறையில் சித்திரவதை செய்யப்பட்டார், அதற்காக அவர் பாராட்டப்பட்டார்.

சாவர்க்கரின் வாழ்க்கையைக் காட்ட சுபாஷ் சந்திரபோஸை சேர்ப்பது சரியல்ல என்கிறார் சந்திரகுமார் போஸ். இதன் மூலம் சாவர்க்கரே அவமதிக்கப்படுவதாகவும் கூறுகிறார்.

“சரியான வரலாற்றைக் காட்டுங்கள், தவறான வரலாற்றைக் காட்டினால், 140 கோடி இந்திய மக்களும் உங்களுக்கு எதிராகப் போவார்கள்” என்கிறார்கள்.

குதிராம் போஸும் சாவர்க்கரால் ஈர்க்கப்பட்டவர் என்று படம் கூறுகிறது.

சுதந்தரப் போராட்டத்தில் தியாகம் செய்த இளம் சுதந்திரப் போராட்ட வீரர்களில் குதிராம் போஸ் ஒருவர். அவர் முசாஃபர்பூரில் ஒரு பிரிட்டிஷ் நீதிபதியைக் கொல்லச் சதி செய்தார். ஆனால் இந்தத் தாக்குதலில் மற்றவர்கள் இறந்தனர். அவர் ஆகஸ்ட் 11, 1908 அன்று தூக்கிலிடப்பட்டார். அப்போது அவரது வயது 18 தான்.

“குதிராம் போஸ் சாவர்க்கரால் ஈர்க்கப்பட்டதாக இந்தப் படம் கூறுகிறது. அதேநேரம் குதிராம் போஸ் 1908இல் இறந்தார் என்பது உண்மை. சாவர்க்கரின் முதல் புத்தகமான ‘1857’க்குப் பிறகு மக்கள் சாவர்க்கரை அறியத் தொடங்கினர், அந்த புத்தகம் வெளிவந்தது. அது 1910ஆம் ஆண்டு. அவர் சாவர்க்கரால் ஈர்க்கப்பட்டார் என்று கூறுவதில் அர்த்தமில்லை,” என்று நிரஞ்சன் டக்லே கூறுகிறார்.

மேலும் டாக்லே, “ஆசாத் ஹிந்த் ஃபௌஜ் படைக்கு போஸ் காந்தி மற்றும் நேருவின் பெயரைச் சூட்டினார். ஆனால் அதற்கு சாவர்க்கரின் பெயரை எங்கே வைத்தார்?” என்று கேள்வி எழுப்புகிறார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.