;
Athirady Tamil News

ரூ. 100 போதும்.. சென்னை மெட்ரோவில் ஒருநாள் பயண அட்டை அறிவிப்பு!!

0

சென்னை மெட்ரோ ரெயில் சேவையை பயன்படுத்துவோர் எண்ணிக்கை முன்பை விட தற்போது பலமடங்கு அதிகரித்து விட்டது. சென்னை மெட்ரோ ரெயில்களில் நாள்தோறும் ஏராளமான மக்கள் பயணம் செய்து வருகின்றனர்.

நகரில் போக்குவரத்து பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் தான் மெட்ரோ ரெயில் சேவை தொடங்கப்பட்டது. சென்னையில் இரண்டு வழித்தடங்களில் மெட்ரோ ரயில் சேவை இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், மெட்ரோ ரெயிலில் நாள் முழுவதும் ரூ. 100 எனும் கட்டணத்தில் பயணம் செய்வதற்கான சிறப்பு சலுகையை சென்னை மெட்ரோ ரெயில் நிர்வாகம் அறிவித்து இருக்கிறது.

புதிய சலுகைக்கு “ஒரு நாள் சுற்றுலா அட்டை” என பெயரிடப்பட்டு இருக்கிறது. இந்த சுற்றுலா அட்டையின் விலை ரூ. 150 ஆகும். இதில் ரூ. 50 பயண அட்டையில் வைப்பு தொகையாக திருப்பி ஒப்படைக்கப்பட்டு விடும். வார இறுதி நாட்களில் புதிய ஒருநாள் சுற்றுலா அட்டையை பயன்படுத்தி கொள்ளலாம். இந்த சுற்றுலா அட்டையின் கால அவகாசம் ஒருநாள் மட்டும்தான். அந்த வகையில் பயனர்கள் ஒருநாள் முடிவில் சுற்றுலா அட்டையை ஒப்படைக்கும் போது ரூ. 50 வைப்புத்தொகை திருப்பி தரப்படும் என்று சென்னை மெட்ரோ ரெயில் நிர்வாகம் தெரிவித்து இருக்கிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.