காட்டுக்குச் சென்ற 60 வயதுடையவர் காணவில்லை! ஓமந்தை கொந்தக்காரன்குளம் பகுதியில் தேடுதல் நடவடிக்கை!
காட்டுக்குச் சென்ற 60 வயதுடையவர் காணவில்லை! ஓமந்தை கொந்தக்காரன்குளம் பகுதியில் தேடுதல் நடவடிக்கை!
வவுனியா –ஓமந்தை, கொந்தக்காரன்குளம் பகுதியில் காட்டுக்குச் சென்ற 60 வயதுடைய நபர் ஒருவர் காணாமல் போயுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
து. நாகராசா (60) என்பவர் புதன்கிழமை காலை காட்டுக்குச் சென்ற நிலையில், இதுவரை வீடு திரும்பவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
இதனையடுத்து, அவரைத் தேடும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
சம்பவம் தொடர்பில் ஓமந்தை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பாக ஒமந்தை பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
காணாமல் போனவர் தொடர்பில் தகவல் தெரிந்தவர்கள் அருகிலுள்ள பொலிஸ் நிலையத்திற்குத் தெரியப்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.