;
Athirady Tamil News

கேரள முதல்வருடன் செந்தில் தொண்டமான் சந்திப்பு !!

0

இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும், கிழக்கு மாகாண ஆளுநருமான செந்தில் தொண்டமான் கேரள முதலமைச்சர் பிரனய் விஜயை சந்தித்துள்ளார்.

கேரள முதலமைச்சர் அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற இந்த சந்திப்பில் கேரளாவுடன் இணைந்து கிழக்கு மாகாணத்தில் சுற்றுலா அபிவிருத்திகளை மேற்கொள்வது குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது.

அத்துடன், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னெடுத்துவரும் பணிகளுக்கு கேரள முதல்வர் பிரனய் விஜயன் வாழ்த்துக் கூறியுள்ளார். மேலும், இலங்கைக்கு வருகை தருமாறு செந்தில் தொண்டமான் விடுத்த அழைப்பையும் அவர் ஏற்றுக்கொண்டுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.