;
Athirady Tamil News

உக்கிரமடையும் போர்! இஸ்ரேலில் சிக்கியுள்ள இலங்கையர்கள் தொடர்பில் அரசாங்கம் எடுத்துள்ள உடனடி நடவடிக்கை

0

இஸ்ரேலுக்கும் ஹமாஸ் அமைப்பிற்கும் இடையில் நிலவும் கடுமையான மோதல்களை கருத்தில் கொண்டு இஸ்ரேலில் வாழும் இலங்கையர்களின் பாதுகாப்பு உள்ளிட்ட அவசர தேவைகள் குறித்து விசேட கவனம் செலுத்துமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

விசேட வேலைத்திட்டம்
இது தொடர்பில் ஜனாதிபதி ஊடகப்பிரிவு இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,

இஸ்ரேலில் வாழும் இலங்கை மக்களின் தேவைகள் தொடர்பில் அதிகபட்ச தலையீட்டை வழங்குவதற்காக இஸ்ரேலில் உள்ள இலங்கை தூதரகம் மற்றும் இலங்கை அரசாங்கத்தின் பொறுப்பு வாய்ந்த திணைக்களங்கள் இணைந்து விசேட வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்தியுள்ளன.

இஸ்ரேலில் பணிபுரியும் அல்லது வேறு காரணங்களுக்காக தங்கியிருக்கும் இலங்கையர்களின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பின் அல்லது அது தொடர்பான வேறு ஏதேனும் சிரமங்கள் இருப்பின், இலங்கை அதிகாரிகளுக்கு நேரடியாகத் அறிவிப்பதற்கு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

அதன்படி, தொலைபேசி எண் (+94) 117966396, வட்ஸ்அப் எண் (+94) 767463391 அல்லது [email protected] என்ற மின்னஞ்சல் மூலம் தேவையான தகவல்களை அறிய முடியும்.

ஏற்றுக்கொள்ளப்பட்ட குடிவரவு குடியகல்வு நடைமுறைகள் மற்றும் வேறு எந்த முறையின் கீழும் இஸ்ரேலில் தங்கியுள்ள எந்தவொரு இலங்கையருக்கும் இந்த சேவையைப் பெற முடியும் என அரசாங்கம் வலியுறுத்துகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.