;
Athirady Tamil News

கச்சதீவு ஒப்பந்தத்தை இலங்கை அரசு இறுக்கமாகவே பின்பற்றும்: ஈ.பி.டி.பியின் தரப்பு திட்டவட்டம்

0

இந்திய இலங்கை அரசுகளால் இணக்கம் காணப்பட்ட கச்சதீவு ஒப்பந்தத்தை இலங்கை அரசு இறுக்கமாகவே பின்பற்றும், இதுவே எமது கட்சியின் எதிர்பார்ப்பாகவும் உள்ளது என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஊடக பேச்சாளரும் கட்சியின் யாழ் மாவட்ட உதவி நிர்வாக செயலாளருமான ஐயாத்துரை ஶ்ரீ ரங்கேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

யாழ் ஊடக அமையத்தில் இன்றையதினம் (13) நடைபெற்ற ஊடக சந்திப்பில் ஊடகவியலாளரின் கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது அவர் மேலும் கூறுகையில், கச்சதீவு விவகாரமானது, 1974, 1976 ஆம் ஆண்டுகளில் காணப்பட்ட இணக்கத்தின் அடிப்படையில் கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானதாக்கப்பட்டது.

அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல்
இதேவேளை, இந்தியாவில் அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது.

இந்த நிலையில், தமிழகம், பாண்டிச்சேரி மாநிலங்களில் 40 தொகுதிகள் உள்ளன. இந்த தொகுதிகளின் நாடாளுமன்ற ஆசனங்களை இலக்குவைத்தே இவ்விவகாரம் ஊதிப் பெருப்பிக்கப்படுகின்றது.

இது காலத்துக்கு காலம் தேர்தல்கள் அண்மிக்கின்ற சமயங்களில் இந்தியாவில் பேசுபொருளாக வலம் வருவது வழமையான ஒரு விடயம்.

கடற்றொழில் அமைச்சரின் முடிவு
அந்தவகையிலேயயே இப்போதும் இவ்வாறான கருத்துக்கள் முன்னெடுக்கப்படுகின்றன.

ஆனால் பிரதமர் தினேஸ் குணவர்த்தன இந்திய ஊடகத்துக்கு தெரிவித்த கருத்தின் அடிப்படையில் பல்வேறு கருத்துக்கள் ஊடகங்களில் பரவினாலும் கடற்றொழில் அமைச்சரின் முடிவே இறுதியானதாக இருக்கும் எனவும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.