;
Athirady Tamil News

அமெரிக்காவில் அழுகிய நிலையில் உடல்கள் மீட்பு:அதிர்ச்சியில் மக்கள்

0

அமெரிக்காவின் கொலராடோ மாகாணத்தில் இறந்தவர்களின் உடலை எரியூட்டும் தகன இல்லத்தில் 189 உடல்கள் அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இறந்த உடல்களை தகனம் செய்யும் ‘ரிட்டர்ன் டூ நேச்சர்’ என்ற அமைப்பு கொலராடோவின் பென்ரோஸ் என்ற சிறிய நகரத்தில் உள்ள பாழடைந்த கட்டடத்தில் உள்ளது.

இதற்கு கணவன் மனைவியான ஜான் ஹால்போர்டு மற்றும் கேரி ஹால்போர்டு ஆகியோரே இந்த அமைப்பின் உரிமையாளர்கள்.

துர்நாற்றம் வீசுவதாக
இவர்கள் இயற்கையான முறையில் உடலை தகனம் செய்வோம் என விளம்பரப்படுத்தி வந்துள்ளனர்.

இந்த நிலையில் தான் குறித்த தகனம் செய்யும் கட்டிடத்தில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக முறைப்பாடுகள் வந்துள்ளன.

அதனை தொடர்ந்து சோதனை மேற்கொண்டதில் அழுகிய நிலையில் ஏராளமான உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அடையாளம் காணும் பணி
கண்டெடுக்கப்பட்ட உடல்களை அடையாளம் காணும் பணி தற்போது ஆரம்பமாகியுள்ளது.

ஜான் ஹால்போர்டு மற்றும் கேரி ஹால்போர்டு ஆகியோரிடம் விசாரணைகள் நடைபெற்று வருகின்றது.

மேலும் கண்டெடுக்கப்பட்ட 189 உடல்களுக்கும் உடல்கள் தகனம் செய்யப்பட்டதாக அஸ்தி கொடுக்கப்பட்டுள்ளது . எனவே இந்த சம்பவம் கொலராடோ மாகாணத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.