;
Athirady Tamil News

மக்கள் மீது திணிக்கப்பட்டுள்ள ராஜபக்‌ச குடும்பத்தின் வரிச்சுமை: மைத்திரி குற்றச்சாட்டு

0

பாதியிலே நாட்டை நாசம் செய்து விட்டு ஒடிய ராஜபக்‌ச குடும்பம் வரிச்சுமையை மக்கள் மீது சுமத்தி இன்று அவதியுற்று உள்ளார்கள் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட கட்சி பிரதிநிதிகளுடனான கலந்துரையாடல் மட்டக்களப்பிலுள்ள தனியார் விடுதியில் நேற்று (04.10.2023) இடம்பெற்றிருந்தது.

குறித்த கலந்துரையாடலில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

கலந்துரையாடல்
அவர் மேலும் தெரிவிக்கையில், “எதிர்வரும் வருடம் தேர்தல் காலம் ஆகவே மக்களுக்காக சேவை செய்கின்ற உண்மையாக உழைக்க கூடிய மக்கள் பிரதிநிதியை உருவாக்க வேண்டும். கடந்த எனது ஆட்சி காலத்தின் போது விலைவாசி உயரவில்லை நாட்டு மக்கள் நிம்மதியாக வாழ்த்தார்கள்.

என்னை பிழையானவராக காட்டி ஆட்சிக்கு வந்தவர்கள் பாதியிலே நாட்டை நாசம் செய்து விட்டு ஒடிவிட்டார்கள் ராஜபக்‌ச குடும்பம் வரிச்சுமையை மக்கள் மீது சுமத்தி இன்று அவதியுற்று உள்ளார்கள்.

மட்டக்களப்பு மாவட்டத்திற்கு மூன்று மாதத்திற்கு ஒரு முறை வருகிறேன் கட்சி நடமுறைகளை அவதானிப்பதற்கும், கட்சியை மறுசீரமைப்பு செய்து நாட்டை கட்டியெழுப்ப பாடுபடுவோம்” என தெரிவித்துள்ளார்.

மாவட்ட அமைப்பாளர் குணரெட்னம் கிரிதரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் அமைச்சர் லக்‌ஷ்மன் வசந்த பெரேரா, அமைப்பாளர்கள், முன்னாள் பிரதேச சபை உறுப்பினர்கள், மாநகரசபை உறுப்பினர்கள் கட்சியின் ஆதரவாளார்கள் என பலர் கலந்து கொண்டனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.