;
Athirady Tamil News

சர்வதேச ரீதியில் பிறந்தது புத்தாண்டு : முதலில் வரவேற்றது எந்த நாடு தெரியுமா

0

புத்தாண்டை (2024) வரவேற்ற உலகின் முதலாவது நாடாக நியூசிலாந்து விளங்குகின்றது.

அந்தவகையிலே, நியூசிலாந்தில் புத்தாண்டு பிறந்ததையொட்டி அந்நாட்டில் கண்கவர் வாண வேடிக்கை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

உலகின் கிழக்கு திசையின் இறுதிப்பகுதியில் அவுஸ்திரேலியா, ஓசியானா கண்டத்தில் பசிபிக் பெருங்கடல் பகுதியில் நியூசிலாந்து நாடு அமைந்துள்ளது.

நியூசிலாந்தில் உள்ள ஆக்லாந்தில்
இதனால் உலகில் முதலாவதாக சூரியன் உதிக்கும் நாடாகவும் நியூசிலாந்து விளங்குகின்றது.

அதன்படி இலங்கை நேரப்படி இன்று மாலை 4.30 மணியளவில் நியூசிலாந்து நாட்டில் உள்ள ஆக்லாந்தில், நள்ளிரவு 12 மணி ஆனவுடன் அந்நாட்டு மக்கள் ஆட்டம், பாட்டம், வாணவேடிக்கை என கோலாகலமாக புத்தாண்டை (2024) வரவேற்றுள்ளனர்.

2024 ஆம் ஆண்டு பிறந்ததை மக்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடி மகிழ்ந்துள்ளனர், அந்த கொண்டாட்டத்தை பட்டாசு வெடித்து கோலாகலமாக கொண்டாடியுள்ளனர்.

சர்வதேச அளவில்
மலர்ந்திருக்கும் இந்த ஆண்டு நல்ல ஆண்டாக அமைய வேண்டும் எனவும் அவர்கள் வேண்டியுள்ளனர்.

புத்தாண்டு பிறந்துள்ள நிலையில் வாண வேடிக்கைகள் மூலம் நாட்டையே வண்ணமயமாக மாற்றி, பரஸ்பரம் மகிழ்ச்சியுடன் இனிப்புகளை வழங்கி ஆரத்தழுவி புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்ளும் காணொளிகள் சமூக வலைத்தளங்களை தற்போது ஆக்கிரமித்து வருகிறது.

இதன் மூலம் சர்வதேச அளவில் 2023 ஆம் ஆண்டு நிறைவடைந்து 2024 ஆண்டு பிறந்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.