;
Athirady Tamil News

பிளாட்பாரத்தில் காத்திருந்து ரயிலில் பயணித்த கோடீஸ்வர தொழிலதிபர்: ஏன் தெரியுமா?

0

மும்பையில் கோடீஸ்வர தொழிலதிபர் ஒருவர் ரயிலில் பயணம் செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கோடீஸ்வர தொழிலதிபர் ரயிலில் பயணம்
இந்தியாவில் பெரும்பாலான மக்கள் அன்றாட வேலைக்காக ரயில் பயணங்களையே தேர்வு செய்வார்கள். அதுவும் குறிப்பாக மும்பையில் பெரும்பாலானோர் ரயிலில் பயணம் செய்கின்றனர்.

இந்நிலையில், ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டு வரும் நிரஞ்சன் ஹிராநந்தனி (Niranjan Hiranandani), தானே மாவட்டத்தில் உள்ள உல்ஹாஸ்நகருக்கு உள்ளூர் ரயிலில் பயணம் செய்ததை இன்ஸ்டாகிராமில் வீடியோவாக பதிவிட்டுள்ளார்.

அவர், சக பயணிகளுடன் பிளாட்பாரத்தில் காத்திருந்து ஏ.சி கோச்சில் ஏறி பயணம் செய்தார். அப்போது, அங்குள்ள பயணிகளிடம் பேசினார்.

அவர் கொடுத்த விளக்கம்
இது குறித்து நிரஞ்சன் ஹிராநந்தனி, “போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்காகவும், நேரத்தை மிச்சப்படுத்துவதற்காகவும் ரயிலில் பயணம் செய்தேன். இது ஒரு அற்புதமான அனுபவம்” என்று கூறியுள்ளார்.

இந்நிலையில், அவர் வெளியிட்ட வீடியோ மில்லியன் கணக்கில் பார்வைகளை அள்ளியது. மேலும், நெட்டிசன்கள் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அதில் ஒருவர், உங்களை போன்ற தலைவர்கள் நாட்டுக்கு தேவை, உங்களை சந்திக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Niranjan Hiranandani (@n_hiranandani)

அதிகரித்து வரும் போக்குவரத்து பிரச்சனையைக் சமாளிக்க பொது போக்குவரத்தைப் பயன்படுத்த வேண்டும் என்பதை செயல்படுத்தியதற்காக பலரும் இவரை பாராட்டி வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.