;
Athirady Tamil News

பள்ளி மாணவர்களுடன் நீரில் கவிழ்ந்த சுற்றுலா படகு: குஜராத்தில் 12 மாணவர்கள், 2 ஆசிரியர்கள் உயிரிழப்பு

0

பள்ளி சுற்றுலாவுக்கு சென்ற படகு கவிழ்ந்ததில் குறைந்தது பள்ளி 12 மாணவர்கள் வரை உயிரிழந்து இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கவிழ்ந்த படகு
இந்தியாவின் குஜராத்(Gujarat) மாநிலம் வதோதராவில்(Vadodara) உள்ள ஹர்னி ஏரியில் (Harni Lake) பள்ளி மாணவர்களை சுற்றுலாவுக்கு ஏற்றிக் கொண்டு சென்ற படகு கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது.

வியாழக்கிழமை நடந்த இந்த சம்பவத்தில் குறைந்தப்பட்சம் 12 மாணவர்கள் மற்றும் 2 ஆசிரியர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்து இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளூர் அதிகாரிகளின் தகவல் படி, 27 பேர் வரை படகில் பயணித்ததாகவும், அதில் 7 பேர் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை வழங்கப்பட்டு வருவதாகவும் தெரியவந்துள்ளது.

உள்ளூர் காவல்துறை வழங்கிய தகவலில், விபத்துக்கான காரணம் இன்னும் உறுதிப்படுத்தப்பட வில்லை என்றும், மீட்பு பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் தெரியவந்துள்ளது.

மேலும், படகில் பயணித்தவர்கள் யாருக்கும் பாதுகாப்பு உடை(life jackets) வழங்கப்படவில்லை என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் மோடி இரங்கல்
இந்நிலையில், X தளத்தில் இரங்கல் தெரிவித்துள்ள இந்திய பிரதமர் மோடி, இந்த சோகமான நேரத்தில் தன்னுடைய எண்ணங்கள் பாதிக்கப்பட்ட குடும்பத்துடன் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

குஜராத் பிரதமர் பூபேந்திர படேல்(Bhupendra Patel) விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு ரூ.4 லட்சமும், காயமடைந்தவருக்கு ரூ.50,000 நிவாரணமும் அறிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.