;
Athirady Tamil News

பென்ஷன் தொகை அதிகரிப்பு; மத்திய அரசு – யாருக்கெல்லாம் தெரியுமா?

0

அடல் பென்ஷன் யோஜனா தொகை அதிகரிக்கலாம் எனக் கூறப்படுகிறது.

அடல் பென்ஷன்
பிப்ரவரி 1ஆம் தேதி இடைக்கால பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்ய உள்ளார். முன்னதாக, அடல் பென்ஷன் யோஜனா திட்டத்தின் கீழ் பெறப்படும் ஓய்வூதியத் தொகையை அதிகரிக்க கோரி ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (PFRDA) அரசுக்கு கடிதம் எழுதியுள்ளது.

தற்போது அடல் பென்ஷன் யோஜனாவின் 5.3 கோடிக்கும் அதிகமான பங்குதாரர்கள் உள்ளனர். இத்திட்டத்தை ஏராளமானோர் பயன்படுத்தி வருகின்றனர். இந்தத் திட்டத்தின் கீழ், மாத ஓய்வூதியம் ரூ. 1000 முதல் ரூ. 5000 வரை இருக்கும்.

தொகை அதிகரிப்பு
இந்த ஓய்வூதிய திட்டத்திற்கு விண்ணப்பிக்கும் நபரின் வயது 18 முதல் 40 வயதுக்குள் இருக்க வேண்டும். 40 வயதிற்கு பிறகு இந்தத் திட்டத்திற்கு விண்ணப்பிக்க முடியாது. விண்ணப்பதாரர் வங்கிக் கணக்கு வைத்திருக்க வேண்டும்.

எந்தவொரு சட்டப்பூர்வ சமூகப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் வராத மற்றும் வரி செலுத்துவோர் அல்லாத மக்களுக்கு அரசாங்க பங்களிப்புகள் வழங்கப்படுகின்றன. முதலீடும் ஓய்வூதியத்தின் அளவைப் பொறுத்தது. இளம் வயதிலேயே இதில் முதலீடு செய்ய ஆரம்பித்தால் அதிக பலன்கள் கிடைக்கும்.

அடல் பென்ஷன் யோஜனா திட்டத்தில் கடந்த ஆண்டு 97 லட்சம் புதிய சந்தாதாரர்கள் இணைந்துள்ளனர். இந்நிலையில், இம்முறை பட்ஜெட்டில் அமைப்புசாரா தொழிலாளர்களுக்குமத்திய அரசு அடல் பென்ஷன் யோஜனா தொகையை அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.