;
Athirady Tamil News

சனி உச்சத்தில் கட்சி தொடங்கிய விஜய்.., அதிகாரம் கிடைக்க கஷ்டம்: ஜோதிடர் சொல்வது என்ன?

0

தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் புதிய கட்சியை விஜய் துவங்கியுள்ள நிலையில் ஜோதிடர்கள் தங்களது கணிப்புகளை வெளியிடுகின்றனர்.

தமிழக வெற்றி கழகம்
தென்னிந்தியாவின் முன்னணி நடிகர்களின் ஒருவரான விஜய் அரசியலுக்கு வருவாரா என்ற கேள்வி பல ஆண்டுகளாக இருந்தது.

இந்நிலையில் ‘தமிழக வெற்றி கழகம்’ என்ற பெயரில் புதிய கட்சியை தொடங்கியிருப்பதாக இன்று அறிக்கை வெளியிட்டார். இதற்கு பல்வேறு தரப்பினரும், அரசியல் பிரமுகர்களும் தங்களுடைய கருத்தை தெரிவித்து வருகின்றனர்.

ஜோதிடரின் கணிப்பு
விஜயின் கட்சி குறித்து ஜோதிட ரீதியாகவும் கருத்துக்களை வெளியிட ஆரம்பித்துள்ளனர். அந்தவகையில் சதீஷ் என்கிற ஜோதிடர் தனது முகநூல் பக்கத்தில் விஜயின் புதிய கட்சி குறித்து கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார்.

அதில் அவர், “நடிகர் விஜய்க்கு வாழ்த்துக்கள். அவர் இன்று ஆரம்பத்த கட்சியின் பெயர் “தமிழக வெற்றி கழகம்”. இன்றைய தினத்தில் சுவாதி நட்சத்திரத்தில் கட்சி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. சுவாதி நட்சத்திரத்தில் தான் சனி உச்சம் என்று சொல்வார்கள், சனி என்றால் மக்கள் சக்தி கூட்டம் சேரும். மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை இந்த கட்சி பெறும். தமிழக வரலாற்றில் நீண்டு நிலைத்திருக்க வாய்ப்புகள் அதிகம்.

பதவி என்று வரும் பொழுது அந்த பதவியை வேறு யாருக்காவது கொடுத்து விட்டு அவர் கட்சி பணியை மட்டும் மேற்கொள்ள வாய்ப்புகள் அதிகம். ஏனென்றால் அதே சுவாதியில் தான் சூரியன் நீச்சம்.

இவர் ரொம்ப நல்லவர் என்று பெயர் எடுப்பார். ஆனால், அதிகாரம் கிடைப்பதற்கு கஷ்டம். சுவாதி என்றால் தேன்கூடு என்று கூட அர்த்தம் உண்டு. தேனை தேன் பூச்சிகளை ஏமாற்றி அந்த தேனை எடுத்துக் கொள்வதைப் போல் சதி செய்யவும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது, கவனமாக கையாள வேண்டும்” என்று கூறியுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.