யாழில். கடந்த வருடம் தாக்குதலுக்கு உள்ளாகி 13 பேர் உயிரிழப்பு
![](https://www.athirady.com/wp-content/uploads/2024/02/Screenshot-2024-02-12-154954.jpg)
யாழ்.போதனா வைத்தியசாலையில் கடந்தவரும் வாள் வெட்டு மற்றும் தாக்குதல் சம்பவங்களுக்கு இலக்காகி, சிகிச்சை பெற்று வந்தவர்களில் 13 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர் என யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த. சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.
வாள் , வெட்டு மற்றும் தாக்குதல்களுக்கு இலக்காகி கடந்த வருடம் 983 பேர் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் 13 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர் என தெரிவித்தார்.