;
Athirady Tamil News

நடிகர் விஜய்யின் கட்சி மீது தொடுக்கப்பட்ட முதல் வழக்கு… கட்சி கொடி அகற்றம்

0

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழக கட்சியின் கொடியை அனுமதியின்றி ஏற்றியதாக அக்கட்சியினர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

நடிகர் விஜய் தனது மக்கள் இயக்கத்தை அரசியல் கட்சியாக மாற்றியதோடு “தமிழக வெற்றிக் கழகம்” என கட்சியின் பெயரை அண்மையில் வெளிியிட்டார்.

கட்சியின் முக்கிய நிர்வாகியான புஸ்ஸி ஆனந்த் கட்சி நிர்வாகிகளுடன் அவ்வப்போது ஆலோசனை நடத்தி வருகிறார்.

நடிகர் விஜய் கட்சி
2026-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலை குறிவைத்து தமிழக வெற்றிக் கழகம் பணியாற்றி வருதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அனுமதியின்றி கட்சிக்கொடி ஏற்றியதாக தமிழக வெற்றிக் கழகத்தினர் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

மாவட்ட பொறுப்பாளர் தலைமையில்,தமிழக வெற்றிக் கழகம் சார்பில் உளுந்தூர்பேட்டை அருகே எலவனாசூர் கோட்டை பகுதியில் புத்தமங்கலம், நெடுமானூர் மட்டிகை ஆகிய ஊர்களில் நேற்றுமுன் (19) கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் ஏராளமான ரசிகர்கள் கலந்துகொண்டனர்.

கட்சி கொடி அகற்றம்
இந்த நிகழ்விற்கு இதற்கு காவல்துறையிடம் உரிய அனுமதி பெறவில்லை என கூறப்படுவதோடு கட்சிக்கொடி ஏற்றிய தமிழக வெற்றிக் கழகத்தினர் அனைவரும் கைது செய்யப்பட்டு கட்சிக் கொடியும் அகற்றப்பட்டுள்ளது.

அத்துடன் அனுமதியின்றி கட்சிக் கொடி ஏற்றியதாக தமிழக வெற்றிக் கழக மாவட்ட பொறுப்பாளர் உட்பட 20 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.