;
Athirady Tamil News

One Chai Please! தள்ளுவண்டி கடையில் டீ வாங்கி குடித்த பில் கேட்ஸ்

0

இந்தியாவில் சாலையோரம் உள்ள தள்ளுவண்டி கடையில் பில் கேட்ஸ் டீ வாங்கி குடிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

டீ மாஸ்டர்
பொதுவாக உலகத்தில் வித்தியாசமான விடயங்களை செய்து பிரபலமானவர்கள் பலரும் இருப்பார்கள். ஆனால் அதில் முக்கியமானவர்கள் இந்தியாவில் தான் இருப்பார்கள். அந்தவகையில், இந்தியாவில் சமூக வலைதள வீடியோ மூலம் வைரலானவர் டீ மாஸ்டர் டாலி (dolly).

இவர் அணிந்திருக்கும் உடையிலும் சரி, டீயை ஆற்றி வாடிக்கையாளர் கையில் கொடுக்கும் வரையிலும் சரி வித்தியாசமாக தோன்றுவார். இவரது சுறுசுறுப்புக்கு பஞ்சமே இருக்காது.

முக்கியாக நடிகர் ரஜினிகாந்தின் பாவனைகள் இருந்ததால் வீடியோ வைரல் ஆவதற்கு முக்கிய காரணமாக இருந்தது.

பில் கேட்ஸ் வீடியோ
தற்போது உலக பணக்காரர்களில் ஒருவரான பில் கேட்ஸ் (bill Gates) டாலியின் கடைக்கு வாடிக்கையாளராக மாறியுள்ளார். டாலி டீ எப்படி போடுகிறார் என்பதை பார்க்கவும், அதன் சுவையை பார்க்கவும் bill Gates முடிவு செய்தார்.

 

View this post on Instagram

 

A post shared by Bill Gates (@thisisbillgates)

இந்நிலையில், இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் bill Gates பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வரும் நிலையில் டாலி கடைக்கு சென்றுள்ளார். அங்கு அவரது கடையில் டீ வாங்கியும் குடித்தார்.

இது தொடர்பான வீடியோவை பகிர்ந்த bill Gates, “எளிமையான ஒரு கப் தேநீரில் துவங்கி, இந்தியாவில் எங்கு திரும்பினாலும் புதுமையை பார்க்க முடியும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.