;
Athirady Tamil News

வடக்கின் சமர்

0

யாழ். மத்திய கல்லூரி மைதானத்தில் இன்று சனிக்கிழமை (09) மதிய போசன இடைவேளைக்கு சற்று பின்னர் நிறைவுக்கு வந்த சென். ஜோன்ஸ் கல்லூரி, யாழ். மத்திய கல்லூரி ஆகியவற்றுக்கு இடையிலான 117ஆவது வடக்கின் சமரில் 10 விக்கெட்களால் சென். ஜோன்ஸ் இலகுவாக வெற்றிபெற்றது.

இதன் மூலம் வடக்கின் சமரில் 39ஆவது வெற்றியைப் பதிவு செய்த சென். ஜோன்ஸ் கல்லூரி, வடக்கின் சமர் தொடரில் 39 – 28 என்ற ஆட்டங்கள் வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கிறது.

79 ஓட்டங்கள் என்ற இலகுவான வெற்றி இலக்கை நோக்கி 2ஆவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய சென். ஜோன்ஸ் விக்கெட் இழப்பின்றி 81 ஓட்டங்களைப் பெற்று அபார வெற்றியீட்டியது.

இதன் மூலம் கடந்த வருட தோல்வியை சென். ஜோன்ஸ் நிவர்த்தி செய்துகொண்டது.

துடுப்பாட்டத்தில் அபிஜோய்ஷாந்த் 10 பவுண்டறிகள் உட்பட 50 ஓட்டங்களுடனும் அண்டசன் சச்சின் 3 பவுண்டறிகள் உட்பட 30 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதிருந்தனர்.

முன்னதாக தனது இரண்டாவது இன்னிங்ஸை போட்டியின் மூன்றாம் நாளான இன்று (09) காலை 9 விக்கெட் இழப்புக்கு 140 ஓட்டங்களிலிருந்து தொடர்ந்த யாழ். மத்திய கல்லூரி மொத்த எண்ணிக்கை 149 ஓட்டங்களாக இருந்தபோது கடைசி விக்கெட்டை இழக்க இன்னிங்ஸ் முடிவுக்கு வந்தது.

விசேட விருதுகள்

சிறந்த துடுப்பாட்ட வீரர்: சகாதேவன் சயந்தன் (யாழ். மத்திய கல்லூரி)

சிறந்த பந்துவீச்சாளர்: அருள்சீலன் கவிஷன் (சென். ஜோன்ஸ்)

சிறந்த சகலதுறை வீரர்: நேசகுமார் எபநேசர் ஜெஸியால் (சென். ஜோன்ஸ்)

சிறந்த விக்கெட் காப்பாளர்: சங்கீத் க்ரேம்ஸ்மித் (சென் ஜோன்ஸ்)

சிறந்த களத்தடுப்பாளர்: ஜெயச்சந்திரன் அஷ்னாத் (சென். ஜோன்ஸ்)

ஆட்டநாயகன்: உதயனன் அபிஜோய்ஷாந்த் (சென் ஜோன்ஸ்)

எண்ணிக்கை சுருக்கம்

யாழ். மத்திய கல்லூரி 1ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 157 (சகாதேவன் சயந்தன் 55, ரஞ்சிதகுமார் நியூட்டன் 24, சதாகரன் ஸ்மில்டன் 22, அருள்சீலன் கவிஷன் 34 – 5 விக்., குகதாஸ் மாதுளன் 52 – 3 விக்.)

சென். ஜோன்ஸ் 1ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 228 (நேசகுமார் ஜெய்ஸால் 53, அண்டசன் சச்சின் 40, உதயனன் அபிஜோய்ஷாந்த் 39, மகேந்திரன் கிந்துஷன் 22, முர்ஃபின் ரெண்டியோ 22, தகுதாஸ் அபிலாஷ் 24 – 5 விக்., முரளி திசோன் 64 – 4 விக்.),

யாழ். மத்திய கல்லூரி 2ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 149 (நிஷாந்தன் அஜய் 23, சதாகரன் சிமில்டன் 21, சுதர்ஷன் அனுஷாந்த் 20, விக்னேஸ்வரன் பாருதி 20, ஸடான்லி சம்சன் 19 – 2 விக்., கிருபானந்தன் கஜகமன் 28 – 2 விக்., ஜெயச்சந்திரன் அஷ்னாத் 30 – 2 விக்.)

சென். ஜோன்ஸ் (வெற்றி இலக்கு 79) 2ஆவது இன்: விக்கெட் இழப்பின்றி 81 (உதயனன் அபிஜோய்ஷாந்த் 50 ஆ.இ., அண்டசன் ஸ்மித் 30 ஆ.இ.)

You might also like

Leave A Reply

Your email address will not be published.