;
Athirady Tamil News

பணக்காரர்கள் வரிசையில் எலான் மஸ்க் பிடித்துள்ள இடம்

0

எலான் மஸ்க்கின் சொத்து மதிப்பு 40 பில்லியன் டாலர்கள் வரை சரிந்து அவர் உலக பணக்காரர்கள் பட்டியலில் மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.

உலகப் பணக்காரர்கள் பட்டியலில் லூயிஸ் உய்ட்டன் நிறுவன தலைமை செயல் அதிகாரி பெர்னார்ட் அர்னால்ட் முதலிடம் வகிக்க அவரை தொடர்ந்து அமேசான் நிறுவனத்தின் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் இரண்டாம் இடம் பிடித்துள்ளார்.

இந்நிலையில், மூன்றாம் இடத்தில் எலான் மஸ்க் உள்ளார்.

பெர்னார்ட் அர்னால்ட்-ன் சொத்து மதிப்பு 197 பில்லியன் டாலர் ஆகவும், பெசோஸ் 196 பில்லியன் டாலராகவும் உள்ளது.

இந்நிலையில், டெஸ்லாவின் பங்கு விலை வீழ்ச்சியால் எலான் மஸ்கின் சொத்து மதிப்பு சரிந்துள்ளது.

இது இந்த ஆண்டில் மட்டும் இதுவரை 29 சதவீதம் குறைந்துள்ளது எனவும் இதனால் அவரது சொத்து மதிப்பு 189 பில்லியன் டாலராக உள்ளது எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

2022-ல் ட்விட்டரை கையகப்படுத்தி அதன் பெயரை X என மாற்றியது என எலான் மஸ்கின் அடுத்தடுத்த நடவடிக்கைகள் விமர்சனத்துக்கு ஆளாகியது.

இதன் தொடர்ச்சியாகவே எலான் மஸ்கிற்கு சரிவு ஏற்பட்டு சொத்து மதிப்பு சரிந்தது. ஆயினும் X தளத்தை மேம்படுத்தும் தொடர் முயற்சிகளில் அவர் ஈடுபட்டு வருகிறார்.

குறிப்பாக YouTube தளத்திற்கு நிகராக வீடியோக்களை கையாளும் விதமாக X தள பக்கம் மேம்படுத்தப்படும் என எலான் மஸ்க் ஏற்கனவே அறிவித்துள்ளார்.

அதற்கான பணிகளும் நடந்து வருகிறது. இந்நிலையில், எலான் மஸ்கின் சொத்து மதிப்பு மூன்றாம் இடத்திற்கு சென்றிருக்கிறது .

You might also like

Leave A Reply

Your email address will not be published.