;
Athirady Tamil News

தங்க கட்டிகளுக்கு பதிலாக Gold Beansகளை வாங்கிக் குவிக்கும் சீனத்து இளைஞர்கள்… விரிவான தகவல்

0

தங்கத்தின் மீது அதிகம் நாட்டம் காட்டத்துவங்கியிருக்கும் சீனத்து இளைஞர்கள், தற்போது பாதுகாப்பான மிதலீடு என Gold Beansகளை வாங்கிக் குவிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Gold Beans மோகம்
குண்டுமணி போன்ற இந்த Gold Beans தோராயமாக ஒரு கிராம் எடையுடன் 400 முதல் 600 RMB வரை (இந்திய மதிப்பில் ரூ 5,209 முதல் 7,814) இருக்கும் என்றே கூறப்படுகிறது.

இந்த Gold Beans மோகம் தற்போது சீனத்து இளம் தலைமுறையினரிடம் அதிகரித்துள்ளதாகவும் மாதம் ஒரு பீன்ஸ் வாங்கும் அளவுக்கு இளைஞர்கள் ஆர்வம் காட்டுவதாகவும் கூறப்படுகிறது.

பொதுவாக சீனாவில் நடுத்தர வயது மற்றும் முதியவர்களே பெரும்பாலும் தங்கத்தில் முதலீடு செய்பவர்கள். ஆனால் தற்போது இளம் தலைமுறையினர் தங்கத்தின் மீதான முதலீட்டில் அதிக ஆர்வம் காட்டுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

முதன்மையான காரணமாக கூறப்படுவது வாங்கும் திறனுக்கேற்ற விலை. வெறும் 1 கிராம் கொண்ட இந்த Gold Beans மீது இளம் தலைமுறையினர் மட்டுமே மிகுந்த ஆர்வம் காட்டுவதாகவும், இளம் தம்பதிகள் அல்லது நடுத்தர வயது மக்கள் 10 கிராம் அல்லது 50 கிராம் தங்க கட்டிகள் மீதே ஆர்வம் காட்டுவதாகவும் கூறப்படுகிறது.

ஆறு ஆண்டுகளில் இல்லாத
சீனாவில் 1990 காலகட்டத்திற்கு பிறகு பிறந்த மக்களே பெரும்பாலும் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். 18 முதல் 40 வயதுடையவர்களே 70 சதவீதம் தங்கத்தில் முதலீடு செய்கின்றனர்.

மேலும், 2023 டிசம்பரில் தங்கம், வெள்ளி மற்றும் ஆபரணங்களின் விற்பனை ஆறு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளதாகவே கூறப்படுகிறது. இது 2022 டிசம்பர் மாதத்துடன்டன் ஒப்பிடுகையில் 29.4 சதவீதம் அதிகம் என்றே தெரிய வந்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.