;
Athirady Tamil News

திருக்கோவில் ஆதார வைத்தியசாலையின் வைத்தியர்கள் பணிப்பகிஸ்கரிப்பு : நோயாளர்கள் விசனம்

0

அம்பாறை திருக்கோவில் ஆதார வைத்தியசாலையின் வைத்தியர்களின் பணிபகிஸ்கரிப்பு காரணமாக கடந்த திங்கட்கிழமை முதல் எந்தவொரு வைத்திய சேவைகளும் இடம்பெறாது இடை நிறுத்தப்பட்டுள்ளது.

இதன்காரணமாக நோயாளிகள் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதுடன் திருக்கோவில் பிரதேச நோயாளிகள் மருத்துவ தேவைகளுக்காக அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலைக்கு சென்று வருவதாக விசனம் தெரிவித்துள்ளனர்.

விசாரணைகள் முன்னெடுப்பு
இeந்த சம்பவம் தொடர்பாக திருக்கோவில் ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர், வைத்தியசாலை அபிவிருத்திக் குழுவினர் மற்றும் வைத்தியசாலையின் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுள்ள உத்தியோகத்தரிடம் வினவியபோது இதனை உறுப்படுத்தியுள்ளனர்.

திருக்கோவிலில் பாடசாலை மாணவர் ஒருவர் உயிர் இழந்ததைத் தொடர்ந்து திருக்கோவில் ஆதார வைத்தியசாலை மருத்துவர்களின் அசமந்த போக்கே காரணம் என தெரிவித்து கடந்த திங்கட்கிழமை காலை 10 முதல் மாலை 5 மணிவரை பிரதான வீதியினை மறித்து மாணவர்கள், பொது மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து வைத்தியர்கள் தமக்கு பாதுகாப்பு இல்லையென தெரிவித்து தொடர்ந்து ஒரு வாரமாக பணி பகிஸ்கரிப்பில் ஈடுபட்டு வருதுடன் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை திருக்கோவில் பொலிஸார், திருக்கோவில் வலயக் கல்வி அலுவலகம் மற்றும் சுகாதார துறையினர் பல்வேறு கோணங்களில் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

கோரிக்கை விடுப்பு
இதன் காரணமாக தற்போது வைத்தியசாலை இயங்காத நிலையில் வயோதிபர்கள், சிறுவர்கள் தொடர்ச்சியாக மருத்துவ சிகிச்சைகளைப் பெற்று வந்தவர்கள் என அனைவரும் மிகவும் சிரமத்துக்கு மத்தியில் பெரும் தொகை பணத்தினை செலவு செய்து தொடர்ச்சியாக செல்ல முடியாதுள்ளதாகவும் விசனம் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, அவசர நோய் காரணமாக வைத்தியசாலைக்கு கொண்டு வரப்படுகின்ற போதிலும் அவர்கள் அனைவரும் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டு வருகின்றனர்.

இதனைக் கருத்தில் கொண்டு மக்களின் உயிர்களுடன் விளையாடாது சம்பந்தப்பட்ட தரப்பினர் துரிதமாக நடவடிக்கைகளைக் முன்னெடுத்து தமக்கான வைத்திய சேவைகளைப் பெற்றுக் கொள்வதற்கு உதவுமாறு நோயாளிகள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.