;
Athirady Tamil News

திமுக 21 தொகுதி வேட்பாளர்கள் – அறிவித்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்..!

0

21 தொகுதிகளில் நேரடியாக போட்டியிடும் திமுக, கூட்டணி கட்சிகளுக்கும் எந்த வித கருத்து வேறுபாடுகளும் இல்லாமல், பங்கீடு செய்யப்பட்டுள்ளது.

அதன் படி திமுக 21, காங்கிரஸ் 10 (தமிழகம் 9+ புதுச்சேரி 1), விசிக, இடதுசாரிகள் 2, மதிமுக, இந்தியன் முஸ்லிம் லீக் மற்றும் கொங்கு மக்கள் தேசிய கட்சி தலா 1 இடங்களிலும் போட்டியிடுகிறது.

திமுகவின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள தேர்தல் அறிக்கையின் முக்கிய பகுதிகள் வருமாறு,
புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்கப்படும்
திருக்குறள் தேசிய மொழியாக அறிவிக்கப்படும்
இலங்கை தமிழர்களுக்கு குடியுரிமை வழங்கப்படும்.
ரயில்வே துறைக்கென தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்
பாஜகவால் கொண்டு வரப்பட்ட புதிய கல்வி கொள்கை ரத்து செய்யப்படும்.
நாடாளுமன்றத்தில் பெண்களுக்கான 33 % அமலுக்கு கொண்டு வரப்படும்.
நாடு முழுவதும் பள்ளிகளில் காலை உணவு திட்டம் அறிமுகம் செய்யப்படும்.
100 நாள் வேலை நாட்கள் 150 நாட்களாக உயர்த்தப்படும் – 400 ஊதியம உயர்வு.
பொது சிவில் சட்டம் கொண்டுவரப்படாது
ஒரே நாடு ஒரே தேர்தல் கைவிடப்படும்
வட்டியில்லாத கடன் மாணவர்களுக்கு 4 லட்சம் வழங்கப்படும்.
சென்னையில் 3-வது ரயில் முனையம் அமைக்கப்படும்.
மத்திய அளவில் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தப்படும்.
ஜி.எஸ்.டி சட்டத்தில் சீர்திருத்தம் கொண்டு வரப்படும்.
வரும் மக்களவை தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் 21 வேட்பாளர்களுக்கான பட்டியலை கட்சியின் தலைவரும், தமிழ்நாடு முதல்வருமான மு.க.ஸ்டாலின் தற்போது வெளியிட்டுள்ளார். அதன் படி அறிவிக்கப்பட்ட வேட்பாளர் பட்டியல் வருமாறு,

1- வட சென்னை- கலாநிதி வீராசாமி

2 – மத்திய சென்னை – தயாநிதி மாறன்

3 – தென் சென்னை -தமிழச்சி தங்கப்பாண்டியன்

4 – ஸ்ரீ பெரும்புதூர் – டி.ஆர்.பாலு

5 – அரக்கோணம் – ஜெகத்தரட்சகன்

6 – காஞ்சிபுரம் – செல்வம்

7 – திருவண்ணாமலை – அண்ணாதுரை

8- வேலூர் – கதிர் ஆனந்த்

9 – தூத்துக்குடி -கனிமொழி

10 – தஞ்சாவூர் -பழனிமாணிக்கம்

11- பொள்ளாச்சி – சண்முகசுந்தரம்

12 – கள்ளக்குறிச்சி – கவுதம சிகாமணி

13 – தருமபுரி – மணி

14 – நீலகிரி – ஆ.ராசா

15 – கோவை – கணபதி ராஜ்குமார்

16- ஆரணி – எம்.எஸ். தரணிவேந்தன்

17 – ஈரோடு – பிரகாஷ்

18 – பெரம்பலூர் – அருண் நேரு

19 – தேனி – தங்கம் தமிழ்ச்செல்வன்

20 – தருமபுரி – மணி

21 – தென்காசி – ராணி

You might also like

Leave A Reply

Your email address will not be published.