;
Athirady Tamil News

மன்னர் சார்லஸ் இளவரசி கேத் மிடில்டன் புற்றுநோய் ; தீர்க்கதரிசி நாஸ்ட்ராடாமஸ் கணிப்பு பலிக்கின்றதா?

0

15-ம் நூற்றாண்டில் பிரான்ஸில் வாழ்ந்த தீர்க்கதரிசி நாஸ்ட்ராடாமஸ் எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பது குறித்துப் பல துல்லியமான கணிப்புகளைச் செய்துள்ளார்.

இரண்டாம் எலிசபெத் மகாராணியின் மரணம், ஹிரோஷிமா குண்டுவெடிப்பு மற்றும் நெப்போலியனின் எழுச்சி ஆகியவற்றை சரியாகக் கணித்தார். இவர் 2024-ம் ஆண்டு முடியாட்சிக்கு கடினமான காலகட்டமாக இருக்கும் என்று கணித்து இருந்தார்.

நாஸ்ட்ராடாமஸ் கணிப்பு நடந்துவிடுமா?
அதுபோன்று இங்கிலாந்து மன்னர் சார்லஸ் மற்றும் அவரது மருமகள் இளவரசி கேத் மிடில்டன் ஆகியோர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் நாஸ்ராடா மசின் புத்தகத்தில் தீவுகளின் மன்னர், மன்னருக்கான அடையாளமே இல்லாத ஒருவரால் பதவியிலிருந்து அனுப்பப்படுவார் என்று குறிப்பிடப்பட்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது.

இதில் தீவுகளின் மன்னர் என்பது சார்லசைக் குறிப்பதாகவும், மன்னருக்கான அடையாளமே இல்லாத ஒருவர் என்பது ஹரியைக் குறிப்பிட்டதாகவும் சிலர் தெரிவிக்கின்றனர்.

அவர் கூறியது போல மன்னர் சார்லஸ் புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் அவர் பதவி விலகக் கூடும் என்று தகவல் வெளியாகி உள்ளது. அவர் தானாகப் பதவி விலகுவார் அல்லது உடல்நிலை காரணமாக வைத்தியர்களின் அறிவுறுத்தலால் மன்னர் பொறுப்பில் இருந்து விலகுவார் என்று கூறப்படுகிறது.

அதேசமயம் ஹரி மன்னர் குடும்பத்தில் இருந்து விலகி இருக்கிறார். இதன் காரணமாகவே நாஸ்ட்ராடாமஸ் சொல்லும் எதிர்பாராத வாரிசு ஹாரிதான் என்கிறார்கள சிலர் .

You might also like

Leave A Reply

Your email address will not be published.