;
Athirady Tamil News

வெளிநாடு அனுப்பவதாக கூறி மோசடி! சந்தேகநபர் கைது

0

கனடா மற்றும் ஏனைய ஐரோப்பிய நாடுகளில் வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி நிதி மோசடி செய்த குற்றச்சாட்டில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர் படல்கம பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும், இவர் வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிறுவனமொன்றை நடத்திக் கொண்டு வருபவர் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மோசடி சம்பவம்
சந்தலங்காவ கொடெல்ல பிரதேசத்தை சேர்ந்த 29 வயதானவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் பன்னல பிரதேசத்தில் இந்த போலி வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிறுவனத்தை நடத்தி வருகின்ற நிலையில், கனடாவுக்கு அனுப்புவதாக கூறி பெண் ஒருவரிடமும் ஆண் ஒருவரிடமும் 2 இலட்சம் ரூபா பணத்தை பெற்றுக் கொள்வதற்காக படல்கம நகருக்கு வந்த போதே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபரிடம் நடத்தப்பட்ட விசாரணையின் போது அவரது வீட்டில் இருந்து சுமார் 50 கடவுச்சீட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.