;
Athirady Tamil News

இலங்கையில் லிட்ரோ சமையல் எரிவாயு விலை தொடர்பில் வெளியான புதிய தகவல்!

0

எரிவாயு இறக்குமதி செய்யும் நாடுகள் தொடர்பான நெருக்கடிகள் முடிவுக்கு வந்தால் உலக சந்தையில் எரிவாயுவின் விலை குறையும் என லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்திருந்தார்.

இதனையடுத்தே நாட்டு மக்களுக்கு நிவாரணம் வழங்கப்படும் என லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, ஏப்ரல் மாதத்திற்கான எரிவாயு விலையை குறைக்க லிட்ரோ நிறுவனம் தீர்மானித்துள்ளது.

அதன்படி, 12.5 கிலோகிராம் உள்நாட்டு லீட்டர் எரிவாயு சிலிண்டர் ரூ.135 குறைக்கப்பட்டு, புதிய விலை 4,115 ஆக விற்பனை செய்யப்படவுள்ளது.

மேலும், 5 கிலோ எடை கொண்ட சிலிண்டரின் விலை 55 ரூபா குறைக்கப்பட்டு, அதன் புதிய விலை ரூ.1,652.

அத்துடன், 2.5 கிலோ எடை கொண்ட சிலிண்டரின் விலை ரூ.23 குறைக்கப்பட்டு, அதன் புதிய விலை ரூ.772. அக விற்பனை செய்யப்படவுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.