;
Athirady Tamil News

ரூ.100 கோடி லஞ்ச வழக்கு; முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் கைது

0

தனியார் பள்ளி உரிமையாளர்களிடம் ரூ.100 கோடிக்கு மேல் சட்டவிரோதமாக வசூலித்ததாக பதியப்பட்ட வழக்கில் முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கைது செய்யப்பட்டுள்ளார்.

அன்பில் மகேஷ் கைது
கடந்த பள்ளிக்கல்வி துறை அமைச்சராக இருந்தவர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி.

முந்தைய திமுக ஆட்சிக்காலத்தில் தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம், மற்றும் பிற சட்டப்பூர்வ அனுமதிகளைப் பெற்றுத்தருவதாகக் கூறி, ரூ.100 கோடிக்கு மேல் சட்டவிரோதமாக வசூலித்ததாக, முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ், தனியார் பள்ளிகள் சங்கத் தலைவர் பி.டி.அரசகுமார் உள்ளிட்டோர் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த வழக்கு தொடர்பாக கடந்த செப்டம்பர் 16 ஆம் திகதி அன்பில் மகேஸுக்கு சொந்தமான இடங்களில் மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் சோதனை நடத்தினர்.

இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி அன்பில் மகேஸ் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், அன்பில் மகேஷின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

இதனையடுத்து, சென்னை அமைந்தகரையில் உள்ள அவரது வீட்டில் வைத்து அன்பில் மகேஷை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

தவெக ஆட்சியில் லஞ்ச வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள முதல் திமுக அமைச்சராக அன்பில் மகேஷ் உள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.