;
Athirady Tamil News

நியூசிலாந்து உயர்ஸ்தானிகராலய கொன்சியூலர் – அரசாங்க அதிபருடன் சந்திப்பு! 

0
நியூசிலாந்து உயர்ஸ்தானிகராலயத்தின் குடிபெயர்வு தொடர்பு அதிகாரியும் கொன்சியூலருமான  சோன்யா டக்ளஸ் (Sonya Douglas), யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர்மருதலிங்கம் பிரதீபன் அவர்களை நேற்றைய தினம் (26.10.2026) திங்கட்கிழமை காலை 10.00 மணிக்கு மாவட்டச் செயலகத்தில் அமைந்துள்ள அரசாங்க அதிபர் அலுவலகத்தில் சந்தித்துக் கலந்துரையாடினார்.
இச்சந்திப்பின் போது, யாழ்ப்பாண மாவட்டத்தில் நிலவும் குடிபெயர்வு தொடர்பான பிரச்சினைகள், ஐரோப்பிய நாடுகளுக்கான சட்டவிரோத ஆட்கடத்தல்(Human Trafficking), சட்ட விரோத புகலிடக் கோரிக்கை தொடர்பாகவும், மத்திய கிழக்கு நாடுகளுக்கு வேலை வாய்ப்புக்கு செல்பவர்கள் தொடர்பான சமூகப் போக்குகள் குறித்து கலந்துரையாடப்பட்டது.
மேலும், யாழ்ப்பாண மாவட்டத்தின் உள்ளூர் நிர்வாகச் செயற்பாடுகள், சமூகப் பொருளாதார வளர்ச்சிகள் மற்றும் மாவட்டத்திலுள்ள சமூகங்கள் எதிர்கொள்ளும் சவால்கள் தொடர்பான விடயங்களையும், சோன்யா டக்ளஸ் அவர்கள் அரசாங்க அதிபரிடம் கேட்டறிந்துகொண்டார்.
யாழ்ப்பாண மாவட்டத்தின் தற்போதைய நிலைமைகள் மற்றும் குடிபெயர்வு தொடர்பான விடயங்கள் குறித்த தெளிவான விடயங்களை பெற்றுக்கொள்ளும் நோக்கில் இச்சந்திப்பு இடம்பெற்றது.
You might also like

Leave A Reply

Your email address will not be published.