உணவுப் பொருட்களுக்கு விசேட விலைச் சலுகை வழங்க சதொச நிறுவனம் தீர்மானம்
வெசாக் மற்றும் பொசன் தினத்தை முன்னிட்டு உணவுப் பொருட்களுக்கு விசேட விலைச் சலுகைகளை வழங்குவதற்கு லங்கா சதொச நிறுவனம் தீர்மானித்துள்ளது.
நாடளாவிய ரீதியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள அன்னதான நிகழ்வுகளுக்கு தேவையான வகையில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
உணவுப் பொருட்களுக்கான முன்பதிவு
லங்கா சதொச விசேட விலைக்கழிவுகளைப் பெறுவதற்கு அந்தந்தப் பிரதேசங்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள தானசாலைகளுக்குத் தேவையான உணவுப் பொருட்களுக்கான முன்பதிவுகளை எதிர்வரும் மே மாதம் 17ஆம் திகதிக்கு முன்னர் மேற்கொள்ளுமாறு கூறப்பட்டுள்ளது.