;
Athirady Tamil News

ரைசி இரங்கல் தெரிவிப்பதற்கு தகுதியற்றவர்: ஈரானின் கடைசி மன்னரின் மகன் சாடல்

0

ஈரான் ஜனாதிபதி ரைசி, இரங்கல் தெரிவிப்பதற்கு தகுதியற்றவர் என்று கூறியுள்ளார் ஈரானின் கடைசி மன்னரின் மகன்.

ஈரானின் கடைசி மன்னர்

ஈரானில் 1979ஆம் ஆண்டு வரை மன்னராட்சிதான் நடைபெற்றுவந்துள்ளது. ஈரானின் கடைசி மன்னர், ஷா என்று அழைக்கப்பட்ட முகமது ரெஸா ஷா (Mohammad Reza Shah or The Shah) ஆவார்.

ஈரான் புரட்சியின்போது ஷா ஆட்சியிலிருந்து தூக்கியெறியப்பட்டார். அதற்குப் பிறகுதான் ஈரான் இஸ்லாமியக் குடியரசு உருவானது.

அட்சியிலிருந்து அகற்றப்பட்ட ஷா, வெவ்வேறு நாடுகளில் அடைக்கலம் கோரியுள்ளார். இறுதியாக, அவர் ஈரானுக்கு வெளியே தலைமறைவாக இருக்கும்போதுதான், 1980ஆம் ஆண்டு, ஜூலை மாதம் 27ஆம் திகதி மரணமடைந்தார்.

ரைசி இரங்கல் தெரிவிப்பதற்கு தகுதியற்றவர்
இந்த முன்னாள் மன்னர் ஷாவின் மகனான Reza Pahlavi என்பவர்தான் தற்போது ரைசி இரங்கல் தெரிவிப்பதற்கு தகுதியற்றவர் என்று கூறியுள்ளார்.

இன்று ஈரான் மக்கள் துக்கம் அனுசரிக்கவில்லை என்று கூறும் Reza, இப்ராஹிம் ரைசி ஏராளமானோரை கொன்று குவித்த ஒரு கொடூரமான கொலைகாரர், அவர் இரங்கல் தெரிவிப்பதற்கு தகுதியற்றவர் என்று கூறியுள்ளார்.

அவருக்காக இரக்கம் காட்டுவது அவரால் கொல்லப்பட்டவர்களை அவமதிப்பதற்கு சமம் என்று கூறியுள்ள Reza, ஈரானுக்கு ஒரே வருத்தம், இஸ்லாமியக் குடியரசு வீழ்ச்சியடைவதைக் காண ரைசி இல்லையே என்பதும், அவரது குற்றங்களுக்காக அவர் விசாரணைக்குட்படுத்தப்படவில்லையே என்பதும்தான் என்கிறார்.

Amnesty International உட்பட பல மனித உரிமை அமைப்புகள், ரைசி, எதிர்க்கட்சியினர் உட்பட, பல்லாயிரக்கணக்கான அரசியல் கைதிகளை கொலை செய்ய ஒப்புதலளித்த, மரணக் கமிட்டியிலுள்ள நான்குபேரில் ஒருவர் என நீண்ட காலமாக விமர்சித்துவந்தது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.