;
Athirady Tamil News

சுங்கத் திணைக்களத்தால் பொது மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

0

இலங்கை சுங்கத்துறையில் வேலை பெற்றுத் தருவதாக கூறி பணத்தை கொள்ளையடிக்கும் கும்பல் தொடர்பில் எச்சரிக்கையுடன் இருக்குமாறு சுங்கத் திணைக்களம் ( Customs Department) பொது மக்களை அறிவறுத்தியுள்ளது.

குறித்த மோசடி தொடர்பில் தமக்கு பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக சுங்க திணைக்களத்தின் பேச்சாளர் சிவலி அருக்கொட (Sivali Arukgoda) தெரிவித்துள்ளார்.

போட்டிப் பரீட்சை
அரச துறைக்கு போட்டிப் பரீட்சை எழுதுபவர்களை இலக்காகக் கொண்டு இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுத்தப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், இலங்கை சுங்கத் திணைக்களத்தில் இணைவதற்கு அவ்வாறானதொரு முறை இல்லை எனவும் போட்டிப் பரீட்சையில் அதிக புள்ளிகளைப் பெற்றவர்களே பணிக்கு அமர்த்தப்படுவர் எனவும் சிவலி அருக்கொட தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.