;
Athirady Tamil News

“தைரியமான மனிதர்” இப்ராஹிம் ரைசி : ஹிஸ்புல்லா தலைவர் புகழாரம்

0

ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசியை (Ebrahim Raisi) “தைரியமான மனிதர்” என்று ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் ஹசன் நஸ்ரல்லா (Hasán Nasrala) தெரிவித்துள்ளார்.

மக்களுக்கு சேவை செய்வதற்கும், நாட்டின் மீது விதிக்கப்பட்ட கடுமையான பொருளாதாரத் தடைகளை எதிர்ப்பதற்கும் அயராது பாடுபட்டதாக அவர் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

ஈரானின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதில் ரைசியின் குறிப்பிடத்தக்க சாதனைகளை நினைவு கூருவதாகவும் அவர் எடுத்துரைத்துள்ளார்.

ரைசியின் நிர்வாகம்
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “ரைசியின் நிர்வாகம் பயனுள்ள நடவடிக்கைகளை எடுத்தது, எண்ணெய் உற்பத்தியை அதிகரித்தது. தெஹ்ரானின் தடுக்கப்பட்ட சொத்துக்களை வெற்றிகரமாக மீட்டெடுத்தது.

ரைசியின் தலைமையின் கீழ், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (SCO) மற்றும் BRICS போன்ற முக்கிய சர்வதேச அமைப்புகளுடன் ஈரான் இணைந்தது.

மறைந்த அதிபர் ரைசி மற்றும் அவரது சகாக்களின் தியாகம் குறித்து தனது இரங்கலைத் தெரிவிக்கின்றேன். விசுவாசமான மற்றும் மரியாதைக்குரிய ஈரானிய அதிகாரிகளின் தியாகம் ஆழ்ந்த வருத்தத்தையும் வேதனையும் அளிக்கிறது.

முன்மாதிரியான நபர்
ரைசியின் தியாகம் எதிர்ப்பு முன்னணிக்கு ஒரு பெரிய இழப்பு. மறைந்த அதிபர் ரைசி எதிர்கால சந்ததியினருக்கு ஒரு முன்மாதிரியான நபராக பணியாற்ற முடியும் என்று வலியுறுத்தி, தியாகிகளை முன்மாதிரியாக பார்க்குமாறு இளைஞர்களை நஸ்ரல்லா வலியுறுத்தியுள்ளார்.

இஸ்லாமியப் புரட்சியின் வெற்றியிலிருந்து ஈரான் அதிபர் ரைசியின் அர்ப்பணிப்பு மற்றும் சேவை பாராட்டத்தக்கது.

இஸ்லாமியப் புரட்சியின் தலைவரான அயதுல்லா கமேனிக்கு (Ayatollah Ali Khamenei) அதிபர் ரைசியின் விசுவாசத்தை பாராட்டுகின்றேன். தலைவருக்கு சேவை செய்யும் அர்ப்பணிப்புள்ள சிப்பாயாக தன்னை ரைசி கருதினார்” என நஸ்ரல்லா சுட்டிக்காட்டியள்ளார் .

You might also like

Leave A Reply

Your email address will not be published.