;
Athirady Tamil News

G7 உச்சி மாநாட்டில் வழிதவறி நடந்துபோன ஜோ பைடன்: இணையத்தில் பரவும் காணொளி

0

G7 உச்சி மாநாட்டுக்காக இத்தாலி (Italy) சென்றுள்ள அமெரிக்க அதிபர் கட்டுப்பாடின்றி எங்கோ நடந்து செல்லும் காணொளி பேசுபொருளாகியுள்ளது.

ஜி7 கூட்டமைப்பின் 50 ஆவது உச்சி மாநாடு இன்றும் நாளையும் இத்தாலியில் உள்ள அபுலியாவில் (Apulia) நடைபெறுகின்றது.

இந்நிலையில், இத்தாலியில் நடைபெறும் G7 உச்சி மாநாட்டுக்குச் சென்றுள்ள அமெரிக்க அதிபர்(Joe Biden) குறித்த செய்திகள் இணையத்தில் வெளியாகின்றது.

50 ஆவது உச்சி மாநாடு
G7 நாடுகளின் கொடிகளைப் பிடித்தபடி பாராசூட்டில் வீரர்கள் குதிக்கும் நிகழ்ச்சி நேற்று முன் தினம் (13) மாலை நடைபெற்றது.

அந்த நிகழ்ச்சியின் போது, G7 மாநாட்டில் கலந்துகொண்டுள்ள தலைவர்கள் அனைவரும் அந்த காட்சிகளைக் கண்டு ரசித்துக்கொண்டிருக்க, திடீரென அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வேறு திசையை நோக்கி நடந்துள்ளார்.

அப்போது, அவரிடம் ஐரோப்பிய ஆணையத்தின் தலைவரான உர்சுலா ஏதோ கூற, அதையும் கவனிக்காமல் ஜோ பைடன் எங்கோ நடந்து செல்லும் போது இத்தாலி பிரதமரான ஜார்ஜியா மெலானி அவருக்கு உதவி செய்கின்றார்.

அமெரிக்க அதிபர்
எங்கோ சென்று கொண்டிருக்கும் ஜோ பைடனை மெலானி சென்று கையைப் பிடித்து மற்ற தலைவர்கள் நிற்கும் இடத்துக்கு அழைத்து வரும் காணொளி ஒன்று இணையத்தில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது.

மேலும், உலக வல்லரசான அமெரிக்காவின் அதிபர் மற்றும், அணு ஆயுதங்களை தன் பொறுப்பில் வைத்திருக்கும், முக்கிய முடிவுகளை எடுக்கும் ஜோ பைடன் இப்படி சரியான மன நிலையில் இல்லாமலும், மறதியுடனும் நடந்துகொள்ளும் விடயம், கவலையை ஏற்படுத்துவதாக இணையவாசிகள் கரத்து தெரிவித்து வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.