;
Athirady Tamil News

ரிஷி சுனக் பிரதமர் பதவிக்கு ஆபத்து: தலைவர் பொறுப்புக்கு வர பலர் தீவிரம்

0

ரிஷி சுனக் தலைமையில் தேர்தலை எதிர்கொண்டு வரலாற்றுப் பின்னடைவை எதிர்கொள்வதற்கு பதிலாக, அவரை மாற்றும் நடவடிக்கைகளை கன்சர்வேட்டிவ் கட்சி தலைவர்கள் தீவிரப்படுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ரிஷி சுனக் மீதான நம்பிக்கை
பொதுத் தேர்தலுக்கு இன்னும் மூன்று வாரங்கள் உள்ள நிலையில், வேட்பாளர்கள் மற்றும் ஆலோசகர்கள் தங்களுக்கு விருப்பமான தலைவர்களை ஆதரிக்கத் தொடங்கியுள்ளதாகவே கூறப்படுகிறது.

பிரித்தானிய அரசியல் வரலாற்றில் முதல் முறையாக மக்கள் செல்வாக்கில் Reform கட்சி ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சியை முந்தியுள்ளதை அடுத்தே, ரிஷி சுனக் மீதான நம்பிக்கையை அவர் கட்சியின் தலைவர்கள் இழந்துள்ளதாக கூறப்படுகிறது.

தற்போதைய சூழலில் Priti Patel, Suella Braverman, Robert Jenrick, Kemi Badenoch, Penny Mordaunt உள்ளிட்டவர்கள் தலைவர் பொறுப்புக்கு வரலாம் என்ற வகையில் ஆதரவு பெற்று வருகின்றனர்.

இதில் பலர் தங்களின் தொகுதியை மீட்கவும் போராடி வருபவர்கள். மூத்த கட்சி உறுப்பினர் ஒருவர் தெரிவிக்கையில், லேபர் கட்சியின் வெற்றி தவிர்க்க முடியாதது என்ற உணர்வு தற்போது எழுந்துள்ளது. ஒரு தொங்கு நாடாளுமன்றத்திற்கான வாய்ப்பும் இல்லாமல் இல்லை.

அரசியலில் இருந்து விலகுவதாக தகவல்
ஆனால் தற்போது அவர்களின் பெரும்பான்மையை குறைக்க முயற்சிக்க வேண்டும் என்பதே அனுமானமாக உள்ளது என்றார். ஜூலை 4 தேர்தலுக்கு பின்னர், தலைவர் பொறுப்புக்கான தெரிவு நடைபெறும். அது கண்டிப்பாக ரிஷிக்கு கடுமையானதாக இருக்கும் என்றே கூறப்படுகிறது.

இதனிடையே, அடுத்த மாதம் நடைபெறவுள்ள தேர்தலில் தனது கட்சி தோல்வியடைந்தாலும் ஐந்தாண்டு காலத்திற்கு எம்.பி.யாக இருப்பேன் என்று சுனக் வலியுறுத்தியுள்ளார்.

தேர்தல் முடிவைப் பொறுத்து அரசியலில் இருந்து விலகுவதாக தகவல் கசிந்ததை அடுத்தே ரிஷி சுனக் விளக்கமளித்துள்ளார். பிரதமர் பொறுப்பை குறிவைக்கும் Priti Patel, Suella Braverman, Penny Mordaunt உள்ளிட்டவர்கள் தங்கள் செல்வாக்கை உயர்த்தவும் போட்டியிட்டு வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.