இளவரசர் ஹரி இங்கிலாந்துக்கு திரும்பினால்… எச்சரிக்கும் முன்னாள் நண்பர்
இளவரசர் ஹரி இங்கிலாந்துக்குத் திரும்பக்கூடாது என்று கூறியுள்ளார் பிரித்தானிய இளவரசர் ஹரியின் முன்னாள் நண்பர் ஒருவர்.
அது என்ன முன்னாள் நண்பர் என்றால், மேகனுடனான தனது திருமணத்துக்குப் பின் ஹரி தனது நண்பர்கள் பலருடனான உறவைத் துண்டித்துவிட்டார். அதனால்தான் அவர்களை ஊடகங்கள் இப்போது முன்னாள் நண்பர்கள் என குறிப்பிடுகின்றன.
இளவரசர் ஹரி இங்கிலாந்துக்கு திரும்பினால்…
அப்படிப்பட்ட முன்னாள் நண்பர்களில் ஒருவர், டாமி செவெர்ன் என்பவர். ஹரி இங்கிலாந்துக்குத் திரும்புவது, அவரை முட்டாளாக காட்டும் என்கிறார் அவர்.
இளவரசர் ஹரி, மேகன் தம்பதியினரின் அடுத்த நெட்ப்ளிக்ஸ் தொடர், போலோ விளையாட்டு தொடர்பானது.
ஹரியின் முன்னாள் நண்பரான டாமி, இங்கிலாந்து போலோ அணியின் கேப்டன் ஆவார்.
ஹரி சிறிது காலம் டாமியின் தாத்தாவான கிறிஸ்டோபர் ஹான்பர்ரி என்பவருடைய பண்ணையில் செலவிட்டுள்ளார்.
அத்துடன், போலோ விளையாட்டுக்குப் பயன்படும் தனது குதிரைகளை டாமியின் தாத்தாவான கிறிஸ்டோபருடைய குதிரை லாயத்தில்தான் விட்டுள்ளார் ஹரி.
ஆனால், தனது நெட்ப்ளிக்ஸ் தொடரில் ஹரி தன்னுடனான உறவு குறித்து எதுவுமே குறிப்பிடவில்லை என்கிறார் டாமி.
ஆக, ஹரி தனது நண்பர்களுடனான உறவைத் துண்டித்துவிட்டார் என்று நினைக்கிறேன். எனவே, அவர் மீண்டும் இங்கிலாந்துக்குத் திரும்புவாரால், அது அவரை முட்டாளாகக் காட்டும் என்கிறார் டாமி.