;
Athirady Tamil News

சுரங்கப்பாதையில் சிக்கிக்கொண்ட ரயில்… பிரான்ஸ் செல்லும் மக்களுக்கு ஏற்பட்ட அவஸ்தை

0

லண்டனிலிருந்து பாரீஸ் செல்லும் ரயில் ஒன்றில் ஏற்பட்ட பழுது காரணமாக, சுற்றுலா செல்லும் திட்டத்திலிருந்த பயணிகள் பலர் கடும் அவஸ்தைக்குள்ளானார்கள்.

சுரங்கப்பாதையில் சிக்கிக்கொண்ட ரயில்…

நேற்று, லண்டனிலிருந்து பாரீஸ் செல்லும் Eurostar ரயில் ஒன்று, காலை 9.20 மணியளவில் Paris Gare du Nord ரயில் நிலையத்தைச் சென்றடைய வேண்டிய நிலையில், சுமார் 6.00 மணியளவில் வழியிலேயே சுரங்கப்பாதைக்குள் பழுதாகி நின்றுவிட்டது.

ரயிலின் கதவுகளும் திறக்காமல், போதுமான காற்றும் வெளிச்சமும் இல்லாமல் சுமார் 800 பயணிகள், சுமார் மூன்று மணி நேரம் சுரங்கப்பாதைக்குள் நிற்கும் ரயிலுக்குள் சிக்கி அல்லல்பட்டுள்ளார்கள்.

மூன்று மணி நேரத்துக்குப் பின், மெல்ல நகர்ந்த ரயில் Calais ரயில் நிலையத்தைச் சென்றடைய, மக்கள் அந்த ரயிலிலிருந்து வெளியேற்றப்பட்டு வேறொரு ரயிலில் ஏற்றப்பட்டுள்ளார்கள்.

பலர், அடுத்து பிடிக்கவேண்டிய விமானத்தைத் தவறவிட, பலரது விடுமுறைத் திட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

பண்டிகை நேரத்தில் விடுமுறையை மகிழ்ச்சியாக செலவிட திட்டமிட்டிருந்த பலர், பணச் செலவு, திட்டத்தில் மாற்றம் என பல பிரச்சினைகளை எதிர்கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், சுரங்கப்பாதையில் சிக்கிய ரயிலில் பழுது நீக்கப்பட்டுவிட்டதாகவும், தற்போது அந்த பாதையில் ரயில் சேவை சீராகிவிட்டதாகவும் Eurostar செய்தித்தொடர்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.