;
Athirady Tamil News

மட்டக்களப்பு பறவைகள் சரணாலயத்தில் தீப்பரவல்!

0

மட்டக்களப்பு குருக்கள் மடம் பறவைகள் சரணாலயத்தின் துறையடி வீதியில் நேற்று மாலை வேளையில் தீச்சம்பவம் பதிவாகியுள்ளது.

பின்னர் குருக்கள்மடம் வடக்கு கிராம சேவை அதிகாரி, மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலாளர் ஊடாக களுவாஞ்சிக்குடி பொலிஸாருடன் இணைந்நு குருக்கள்மடம் முகாம் இராணுவத்தினர், பொதுமக்கள், போன்றோர் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர நவடிக்கை எடுத்தனர்.

மேலும் இதே போல் கடந்த 2024 ஆண்டும் பாரியளவு, தீப்பரவல் குருக்கள்மடம் ஏத்தாலைக்குள பறவைகள் சரணாலயத்தில் நடந்தமை குறிப்பிடத்தக்கது.

இப்பறவைகள் சரணாலயத்திற்கு இலட்ச கணக்கிலான உள்நாட்டு, வெளிநாட்டு பறவைகள் வருகை தருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இச்சந்தர்ப்பத்தில் பறவைகள் எதற்கும் எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில் பேராபத்து வராமல் பாதுகாக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இச் செயற்பாடு தொடர்ந்த வண்ணம் உள்ளதாகவும், இவ்வாறு பாதுகாக்கப்பட்ட பிரதேசத்திற்குள் அனுமதி இன்றி உள் நுழைந்து, காட்டுத்தீயை ஏற்படுத்தியவர்கள், சட்டத்திற்கு முன் நிறுத்த வேண்டும் எனவும் கிராம வாசிகள் தெரிவிக்கின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.