;
Athirady Tamil News

வாகன இறக்குமதி தொடர்பில் ஜனாதிபதி அநுர வெளியிட்ட மகிழ்ச்சி தகவல்

0

வாகன இறக்குமதிக்கான (vechile import)தடை எதிர்வரும் பெப்ரவரி முதலாம் திகதி முதல் நீக்கப்படும் என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நேற்று (19) உறுதிப்படுத்தினார்

தற்போது அரசாங்கத்திற்குச் சொந்தமான சொகுசு வாகனங்களை ஏலம் விடுவது குறித்துப் பேசும்போது ஜனாதிபதி இவ்வாறு கூறினார்.

இறக்குமதி கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டதை அடுத்து ஆரம்ப காலகட்டத்தில் வாகன விலைகள் ஏற்ற இறக்கங்களை சந்திக்க வாய்ப்புள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.

விலைகள் சீரானவுடன், அரச பொதுச் செலவினங்களை ஒழுங்குபடுத்துவதற்கும் அதிகப்படியானவற்றைக் குறைப்பதற்கும் தொடர்ச்சியான நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, தற்போது அரச வாகனப் பிரிவில் உள்ள சொகுசு வாகனங்களை ஏலம் விட அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.