;
Athirady Tamil News

யாழ்ப்பாணம் கலாச்சார மையத்திற்கு பெயர் மாற்றியமை எமக்கு மனவருத்தத்தை தந்துள்ளது

0

யாழ்ப்பாணம் கலாச்சார மையத்திற்கு பெயர் மாற்றியமை எமக்கு மனவருத்தத்தை தந்துள்ளது என வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் விந்தன் கனகரத்தினம் தெரிவித்துள்ளார்.

யாழ் , ஊடக அமையத்தில் இன்றைய ஆதினம் புதன்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,

யாழ் கலாசார மத்திய நிலையமானது ஈ.பி.டி.பி யாழ் மாநகரை ஆட்சி செய்த காலப்பகுதியில் தமிழ் மக்களின் கலாசாரத்தை பாதுகாக்கும் ஓரு குதியீடாக இந்திய அரசின் நிதி உதவியுடன் நிர்மாணம் செய்யப்பட்டது.

இது அன்று யாழ் மாநகரசபையை ஆட்சி செய்த ஈ.பி.டி.பியினர் பிரேரணையாக கொண்டு வந்த போது, தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் எதிர்க்கட்சியாக இருந்தும் கூட அந்த முயற்சி எமது மக்களின் கலாசாரத்தை கொண்டதாக இருந்தமையால் அதனை முழுமையாக ஆதரித்து வரவேற்றிருந்தோம்.

ஆனால் இன்று அதன் பெயர் மாற்றப்படுள்ளது அது எமக்கு வருத்தமளிக்கின்றது. இதேவேளை இது தமிழ் மக்களின் கலாசாரத்தை சுமந்து நிற்கும் ஒரு வரலாற்றுக் கூடமாகும்

இந்த பெயர் மாற்றம் இந்திய அரசின் செயற்பாடாகவோ அல்லது அரசின் செயற்பாடாகவோ இருந்தாலும் அத்தை மாற்றியமைக்க வேண்டும் என்பதே எமது நிலைப்பாடு.

இதைவிட தமிழுக்கு கடை நிலை வழங்கப்பட்டமை மற்றும் அந்த சம்பவம் திரை நீக்கம் செய்யும்போதி தான் தனக்கு தெரியும் என அமைச்சர் ஒருவர் தெரிவித்தமை வேதனையான விடயம் என மேலும் தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.