அமெரிக்கா சென்றடைந்தார் பிரதமர் மோடி

பிரான்ஸ் பயணத்தை புதன்கிழமை நிறைவு செய்த பிரதமா் மோடி, வியாழக்கிழமை அமெரிக்காவின் வாஷிங்டன் டிசி வந்தடைந்தார்.
அமெரிக்காவில் இரண்டு நாள்கள் அரசுமுறை பயணம் மேற்கொள்ளும் அவா், அதிபா் டொனால்ட் டிரம்ப்புடன் இருதரப்பு பேச்சுவாா்த்தை நடத்தவுள்ளாா்.
தொடர்ந்து, பிரதமர் மோடி தனது அமெரிக்க பயணத்தின்போது ஸ்டார்லிங்க்கின் தலைவர் எலான் மஸ்க்கையும் சந்திக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
அமெரிக்காவின் 47-ஆவது அதிபராக டொனால்ட் டிரம்ப் கடந்த ஜனவரி 20-ஆம் தேதி பதவியேற்றாா்.
டிரம்ப் நிா்வாகம் பதவியேற்ற சில வாரங்களில் அமெரிக்காவுக்கு செல்லும் 4-ஆவது வெளிநாட்டுத் தலைவா் பிரதமா் மோடி என்பது குறிப்பிடத்தக்கது.