;
Athirady Tamil News

சாரதியின் தூக்க கலகத்தால் விபத்து; தெய்வாதீனமாக தப்பிய உயிர்கள்

0

ஹட்டன், கொட்டகலை நகரில் இன்று (24) காலை ஒரு காரும் லொறியும் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டதாக திம்புலபத்தனை பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்து ஹட்டன்-நுவரெலியா பிரதான சாலையில் கொட்டகலை ரோசிட்டா பகுதியில் நிகழ்ந்துள்ளது.

பன்னிப்பிட்டியவிலிருந்து நுவரெலியா நோக்கிச் சென்ற கார், கொட்டகலை ரோசிட்டா பகுதியிலிருந்து ஹட்டன் நோக்கி எதிர் திசையில் சென்ற லொறியுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை, எனினும் விபத்தில் காரும் லொறியும் பலத்த சேதமடைந்தன. காரின் ஓட்டுநர் தூங்கியதால் விபத்து ஏற்பட்டதாக தெரிவித்த பொலிஸார், விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.