ஓடிசி தொடருந்திலிருந்து தவறி வீழ்ந்த சுற்றுலா பயணி

ஒஹிய தொடருந்து நிலையத்துக்கு அருகில் இன்று காலை எல்ல ஓடிசி தொடருந்திலிருந்து வீழ்ந்து சுற்றுலா பயணியொருவர் காயமடைந்துள்ளதாக ஹப்புத்தலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சுற்றுலாப் பயணி கண்டியிலிருந்து எல்ல நோக்கிப் பயணித்த சீனாவைச் சேர்ந்த 35 வயதுடைய பெண் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவத்தில் காயமடைந்த குறித்த பெண், தொடருந்து பணியாளர்களால் மீட்கப்பட்டு ஹப்புத்தலை தொடருந்து நிலையத்துக்குக் கொண்டுவரப்பட்டுள்ளார்.
அதன் பின்னர் சுற்றுலா பயணி சிகிச்சைகளுக்காக தியத்தலாவ ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.