;
Athirady Tamil News

தற்காலிக போர் நிறுத்த அறிவிப்பை மீறி உக்ரைனில் ரஷியா தாக்குதல்!

0

கீவ்: உக்ரைனில் தற்காலிக போர் நிறுத்த அறிவிப்புக்கு பின்பும் ரஷியா தாக்குதல்களை நிகழ்த்தியதாக உக்ரைன் அதிபர் வோலோதிமீர் ஸெலென்ஸ்கி குற்றம் சுமத்தியுள்ளார்.

3 ஆண்டுகளைக் கடந்தும் உக்ரைனில் நீடிக்கும் சண்டைக்கு தற்காலிக தீர்வாக, ஞாயிற்றுக்கிழமை(ஏப். 20) ஒருநாள் மட்டும் போர் நிறுத்தம் அமலில் இருக்கும் என்று ரஷிய தரப்பிலிருந்து அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், சனிக்கிழமை இரவு தொடங்கி ஞாயிற்றுக்கிழமை காலை வரை பல்வேறு குண்டு வீச்சு தாக்குதல்கள் உக்ரைன் எல்லைக்குள் நிகழ்த்தப்பட்டிருப்பதாக உக்ரைன் அதிபர் நேற்று (ஏப். 20) தெரிவித்துள்ளார்.

உக்ரைன் – ரஷியா இடையிலான சண்டைக்கு தீர்வு காணும் நோக்கத்தில், மேற்கண்ட தற்காலிக போர் நிறுத்தத்தை மேலும் 30 நாள்களுக்கு நீட்டிக்க தங்கள் தரப்பு விரும்புவதாகவும், ஆனால், ரஷியா இதே பாணியில் தாக்குதல்களை நடத்தினால், உக்ரைனும் தீவிர எதிர்வினையாற்றும் என்றும் ஸெலென்ஸ்கி குறிப்பிட்டுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.