அனுமன் கோவில் மேற்கூரை இடிந்த விபத்தில் 5 பேர் உயிரிழப்பு
அனுமன் கோவிலில் மேற்கூரை இடிந்த விபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.
5 பேர் உயிரிழப்பு
மஹாராஷ்டிராவின் பர்பானி மாவட்டத்தின் யஷ்வாடி கிராமத்தில் உள்ள அனுமன் கோவிலில் இன்று சனிக்கிழமை என்பதால் கூட்டம் அதிகளவில் இருந்துள்ளது.
மாலை 3;30 மணியளவில், கட்டுமான பணியில் இருந்த கோவிலின் சபா மண்டபத்தின் மேல் கூரை திடீரென இடிந்து விழுந்துள்ளது.
இது குறித்து தகவலறிந்த காவல்துறையினர், உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதில், குறைந்தது 5 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 30க்கும் மேற்பட்டோர் இடிபாடுகளில் சிக்கி காயமடைந்து தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த துயர சம்பவத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ள மஹாராஷ்டிரா முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னாவிஸ், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளார்.